மீண்டும் சந்தையை ஆக்கிரமிக்குமா ஸ்பிளெண்டர்? கண்கவர் 'எக்ஸ்.டெக்' மாடல் அறிமுகம்..!

published 2 years ago

மீண்டும் சந்தையை ஆக்கிரமிக்குமா ஸ்பிளெண்டர்? கண்கவர்  'எக்ஸ்.டெக்' மாடல் அறிமுகம்..!

இரு சக்கர வாகனங்கள் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் 'ஹீரோ மோட்டார் நிறுவனத்தின் தயாரிப்பில் ஸ்பிளெண்டர் மிகவும் பிரபலமான மோட்டார் சைக்கிளாகும்.

இதில் புதிதாக ஸ்பிளெண்டர் பிளஸ் எக்ஸ்.டெக் என்ற பெயரிலான மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எரிபொருள் சிக்கனமானது என்ற அளவில் ஸ்பிளெண்டர் மாடல் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. புதிய மாடல் டிஜிட்டல் மீட்டர் புளூடூத் இணைப்பு வசதி கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதனால் ஸ்மார்ட்போனுக்கு வரும் அழைப்புகள் குறித்த அறிவுறுத்தல், குறுஞ் செய்தி அறிவுறுத்தல் (எஸ்.எம்.எஸ்.), எரிபொருள் சிக்கனம், இரண்டு டிரிப்மீட்டர், எரிபொருள் அளவைக் காட்டும் மீட்டர், ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்வதற்கு வசதியாக யு.எஸ்.பி. போர்ட் ஆகியன இதில் உள்ள சிறப்பம்சமாகும்.

'இது தவிர சைடு ஸ்டாண்ட் போட்டிருந்தால் அறிவுறுத்துவ தோடு என்ஜின் ஸ்டார்ட் ஆகாது. அதேபோல வாகனம் கீழே விழுந்தவுடனேயே என்ஜின் தானாக செயல்பாடுகளை நிறுத்தி விடும் சென்சார் இதில் உள்ளது. இது தவிர பகலில் ஒளிரும் எல்.இ.டி. விளக்கு, ஹாலோஜென் முகப்பு விளக்கு, புதிய கிராபிக் டிசைன், கருப்பு நிற அலாய் சக்கரம் ஆகிய அம்சங்களோடு நான்கு கண்கவர் வண்ணங்களில் (பீட்டா நீலம், கேன்வாஸ் கருப்பு, டொர்னடோ கிரே, பேர்ல் வெள்ளை) வந்துள்ளது.

இது 7.9 ஹெச்.பி. திறன் 8.05 நியூட்டன் மீட்டர் டார்க் இழு விசை, 97.2 சி.சி. திறன் கொண்ட ஒற்றை சிலிண்டர் என்ஜினுடன் 4 ஸ்பீடு கியர்களுடன் வந்துள்ளது. இந்திய சந்தையை ஒரு காலத்தில் ஸ்பிளெண்டர் ரக பைக்குகள் ஆக்கிரமித்திருந்தன. தற்போது இந்த புது வரவு எந்த அளவுக்கு மக்கள் மனதை ஆட்கொள்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe