குருதி கொடையாளர்கள் இனி விரைந்து தானம் அளிக்க முடியும்.. கார் வழங்கி அசத்திய ப்ரொபெல் நிறுவனம்..!

published 1 year ago

குருதி கொடையாளர்கள் இனி விரைந்து தானம் அளிக்க முடியும்.. கார் வழங்கி அசத்திய ப்ரொபெல் நிறுவனம்..!

கோவையில் ரத்த தானம் செய்யும் தன்னார்வலர்களை மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லும் விதமாக ப்ரொபெல் (Propel) நிறுவனத்தினர் கார் ஒன்றை வழங்கி அசத்தியுள்ளனர்.

கோவையைச் சேர்ந்த ப்ரொபெல் நிறுவனம் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் பல்வேறு சமூக பணிகள் மேற்கொண்டு வருகிறது. மலைவாழ் மக்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுத்தல், அரசு பள்ளியில் புதிய வகுப்பறைகள் அமைத்தல், ஏழை குழந்தைகளின் கல்விக்கு உதவுதல் போன்ற பல்வேறு சமூக பணிகளை முன்னெடுத்து வருகிறது.

இதனிடையே கோவையில் 'உதிரம்' கோபி என்பவர் தனது நண்பர்களைத் திரட்டி வாட்ஸ்-அப் குழு அமைத்து ரத்த தானம் செய்து வருகிறார். ரத்தம் தேவைப்படுவோருக்கு ஓடிச்சென்று உதவுகின்றது இந்த குழு. இந்த நிலையில்,  அவசர கதியில் ரத்தம் தேவைப்படுவோருக்கு கொடையாளர்கள் பல கிலோமீட்டர்கள் கடந்து வந்து தானம் செய்வதில் சிக்கல்  நீடித்து வந்தது.

இதனையறிந்த கோவையைச் சேர்ந்த ப்ரொபெல் நிறுவனத்தார் 'உதிரம்' கோபியின் அன்னை கரங்கள் அமைப்புக்கு 12 லட்சம் மதிப்பிலான புதிய மகேந்திரா பொலிரோ வாகனத்தை வழங்கியுள்ளனர்.  இந்த வாகனத்தை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, ப்ரொபெல் நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வு திட்ட இயக்குநர் வித்யா செந்தில்குமார் ஆகியோர் இன்று கோபி மற்றும் அவரது குழுவினரிடம் வழங்கினர்.

இனி கோவை சுற்றுவட்டாரப்பகுதி மக்களுக்கு ரத்தம் தேவைப்பட்டால் 9994148105 என்ற தொலைபேசி எண்ணிற்கு அழைக்கலாம் உங்களைத் தேடி விரைந்து வருவார்கள் குருதி கொடையாளர்கள்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe