வால்பாறை செல்லும் சுற்றுலாப் பயணிகளே கவனம் - வனத்துறை அறிவுறுத்தல்

published 2 years ago

வால்பாறை செல்லும் சுற்றுலாப் பயணிகளே கவனம் - வனத்துறை அறிவுறுத்தல்

கோவை: வால்பாறையில் கனமழை பெய்து வருவதால் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பாக பயணிக்குமாறு வனத்துறை அறிவுறுத்தியுள்ளது

தமிழகத்தில் பிரபலமான சுற்றுலா பகுதிகளில் ஒன்று வால்பாறை. இந்த சுற்றுலாத்தலமானது கோவை மக்களை மட்டுமல்லாது வெளிமாநிலத்தவர்கள்  மற்றும் வெளிநாட்டவர்களையும் கவரும் இடமாக உள்ளது.

கடந்த சில மாதங்களாக கடும் வெயிலின் தாக்கத்தினால் இருந்த வால்பாறை தற்போது தொடர் மழையினால் குளு குளுவென மாறியுள்ளது. வால்பாறை செல்லும் வழியில் உள்ள கவர்கல் பகுதியில் தற்போது பனிப்பொழிவு அதிகமாக உள்ளதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மலைப்பாதையில் உள்ள மரங்கள் காய்ந்து உள்ளதால் சுற்றுலாப் பயணிகள் மிகுந்த கவனத்துடன் செல்ல வேண்டும் எனவும், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனத்தில் செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்குகளைப் பயன்படுத்த வேண்டும் எனவும் தொடர் கனமழை பெய்து வருவதால் சுற்றுலாப் பயணிகள் மிகுந்த கவனத்துடன் செல்லுமாறும் மலைப்பாதையில் வனவிலங்கு நடமாட்டம் உள்ளதால் வனவிலங்குகளைத் துன்புறுத்தாமல் பாதுகாப்பாகச் செல்லுமாறு வனத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe