ட்விட்டரை கைப்பற்றுவாரா எளான் மஸ்க்

published 2 years ago

ட்விட்டரை கைப்பற்றுவாரா எளான் மஸ்க்

உலகின் முன்னணி சமூக ஊடக தளங்களுள் ஒன்று ட்விட்டர் என்பதும் உலகின் முதல் பணக்காரரான எளான் மஸ்க் ட்விட்டரின் அநேக பங்குகளுக்கு சொந்தக்காரர் என்பதும் எல்லோரும் அறிந்ததே.

சில வாரங்களுக்கு முன் எளான் மஸ்க் ட்விட்டரின் நிர்வாக குழு உறுப்பினராகும் அழைப்பைப் பெற்றார் என்பதும் அதனை ஏற்க மறுப்பு தெரிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் எளான் மஸ்க் ட்விட்டரின் நிர்வாகத்திற்கு ட்விட்டரை தனக்கு $40 பில்லியனிற்கு, அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 4100 கோடிக்கு விற்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.

சமூக வலைதளமான ட்விட்டர் மக்களின் கருத்து சுதந்திரத்துக்கு முக்கியமான கருவி என்றும், இது போன்று சமூக தளங்கள் சிறப்பாக செயல்பட அது தனியார் வசம் ஒப்படைக்கப் படவேண்டும் என்றும் அவர் இப்போதுள்ள நிர்வாக இயக்குநர் ப்ரெட் டேலர்-ருக்கு அனுப்பிய செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

கூடுதலாக, இதுவே அவர் ட்விட்டரை வாங்குவதற்கு கொடுக்கக் கூடிய அதிகபட்ச தொகை என்றும், ட்விட்டர் நிர்வாகம் இதனை ஏற்க மறுத்தால் தான் ட்விட்டரின் பங்குதாரராக இருக்கும் முடிவை மறுபரிசீலனை செய்வதாகவும் கூறியுள்ளார்.  எளான் மஸ்க்-கின் இந்த முன்மொழிதலை ஏற்பது பற்றி ட்விட்டர் நிர்வாகம் நிதானமாகச் சிந்தித்துச் செயல்படும் என்று ட்விட்டரின் நிர்வாகத்தினர் கூறியுள்ளனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe