கோவையில் திறக்கப்பட்டது லுலு மால்.. எப்படி இருக்கு? பிரத்தியேக புகைப்பட தொகுப்பு

published 1 year ago

கோவையில் திறக்கப்பட்டது லுலு மால்.. எப்படி இருக்கு? பிரத்தியேக புகைப்பட தொகுப்பு

ஐக்கிய அரபு எமிரேட்ஸை தலைமையிடமாக கொண்ட  லுலு நிறுவனம் தமிழகத்தில் தனது வணிகத்தை கோவையில்  முதன் முதலாக தொடங்குகிறது. 

இந்தியாவில் திருவனந்தபுரம், கொச்சின், பெங்களூரு மற்றும் லக்னோ ஆகிய நகரங்களில் இந்நிறுவனத்தின் வணிக வளாகங்கள் உள்ளது.

கடந்தாண்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சுற்றுப்பயணம் சென்றிந்தபோது, லுலு நிறுவனம் தமிழகத்தில் ரூபாய் 3500 கோடி முதலீட்டை செய்வதற்க்கான ஒப்பந்தம் செய்துள்ளது. 

அதன்படி தமிழகத்தில் தனது முதல் வணிகத்தை தொடங்கும் வகையில் கோவையில் லுலு ஹைப்பர் மார்க்கெட் தொடங்கியுள்ளது.

கோவை அவினாசி சாலை லஷ்மி மில் சிக்னல் அருகே லுலு ஹைப்பர் மார்க்கெட் அமைவதற்கான பணிகள் கடந்த ஆண்டு துவங்கப்பட்டது. 

1.20 லட்சம் சதுர அடியில் மிக பிரம்மாண்டமாக கட்டப்பட்ட ஹைப்பர் மார்க்கெட்டை தமிழக தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா துவக்கி வைத்தார். 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe