கொலை வழக்கில் வாதாடி வெற்றி பெற்ற வழக்கறிஞருக்கு பாராட்டுவிழா

published 1 year ago

கொலை வழக்கில் வாதாடி வெற்றி பெற்ற வழக்கறிஞருக்கு பாராட்டுவிழா

கோவை: கோவை பூமார்க்கெட் பகுதியில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின், இளைஞர் பெருமன்ற பொறுப்பாளர் கொலை வழக்கில் வாதாடி வெற்றி பெற்ற வழக்கறிஞருக்கு பாராட்டுவிழா நடைபெற்றது.


இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின், இளைஞர் அமைப்பாளர், அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற பொறுப்பாளராக செயல்பட்டு வந்த ஆவாரம்பாளையத்தை சேர்ந்த, சதீஷ்குமார் கடந்த 12-4-2016 அன்று இந்து முன்னணியை சேர்ந்த, அருண்குமார், விஜயகுமார், குறுக்கு சாமி, ஆகியோரால்  படுகொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் மூன்று பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்தது இதனை பெற்றுக் கொடுத்த, வழக்கறிஞர்  ராதாகிருஷ்ணனை, பாராட்டும், விதமாக அவரை இன்று, பூமார்க்கெட் பகுதியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் அவரை, சந்தித்து சால்வை அணிவித்து மரியாதை செலுத்தபட்டது.

இந்தநிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொருளாளர் எம் ஆறுமுகம், மாவட்ட செயலாளர் சி சிவசாமி, துணைச் செயலாளர் ஜேம்ஸ், மௌனசேகரன், நிர்வாக குழு உறுப்பினர் கல்யாணசுந்தரம், சி ஏ வேலுச்சாமி, வழக்கறிஞர் சக்திவேல், கே சி மூர்த்தி, எஸ் ஆறுமுகம், ஆர் சசிகுமார், கே எம் திருமலைசாமி, அபிமன்யு, மற்றும் பலர்  கலந்து கொண்டனர்

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe