திருப்பூரில் இன்று தனியார் வேலை வாய்ப்பு முகாம்.. இளைஞர்கள் கலந்து கொள்ள ஆட்சியர் அழைப்பு

published 1 year ago

திருப்பூரில் இன்று தனியார் வேலை வாய்ப்பு முகாம்.. இளைஞர்கள் கலந்து கொள்ள ஆட்சியர் அழைப்பு

திருப்பூர் : திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் இன்று 16-ந்தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் காலை 10-30 மணிக்கு நடக்கிறது.

முகாமில் தனியார் துறை வேலையளிப்பவர்கள் கலந்து கொண்டு வேலை நாடுநர்களை தேர்வு செய்ய வருகை தர உள்ளனர். வேலை நாடுபவர்கள் தங்கள் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டை மற்றும் சுய தகவல் படிவத்துடன் கலந்து கொள்ளலாம். வேலையளிப்போரும் தங்களுக்கு தேவையான காலியிடங்களை நிரப்பிட தங்கள் வருகையை வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழி காட்டும் மையத்தில் முன்பதிவு செய்து கொள்ள தெரிவிக்கப்படுகிறது.

எழுத படிக்க தெரிந்தவர்கள் முதல் முதுநிலை பட்டதாரிகள் வரை ஐ.டி.ஐ.,டிப்ளமோ படித்தவர்கள் மற்றும் தையல் பயிற்சி பெற்றவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

வேலையளிப்போரும் மேலும் வேலை நாடுபவர்களும் https://www.tnprivatejobs.tn.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ள தெரிவிக்கப்படுகிறது. முகாமிற்கு வரும் போது தங்களது பதிவில் குறைகள் கண்டறியப்பட்டால் அதனை சரி செய்து கொள்ளலாம். புதுப்பித்துக் கொள்ளலாம்.

கூடுதல் கல்வி பதிவு செய்து கொள்ளலாம். தகுதியிருப்பின் வேலை வாய்ப்பற்றோர் உதவித் தொகை விண்ணப்பம் பெற்று உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். தனியார் துறைகளில் வேலையில் சேருவதால் தங்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண் ரத்து செய்யப்பட மாட்டாது. இப்பணி முற்றிலும் இலவசமானது. மேலும் விவரங்களுக்கு 0421-2999152, 9499055944 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இத்தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe