அமைச்சரின் இலாகாக்களை ஆளுநர் ஏற்க மறுப்பது அதிக பிரசிங்கித்தனம், அயோக்கியத்தனம் - கோவையில் வைகோ பேட்டி

published 1 year ago

அமைச்சரின் இலாகாக்களை ஆளுநர் ஏற்க மறுப்பது அதிக பிரசிங்கித்தனம், அயோக்கியத்தனம் - கோவையில் வைகோ பேட்டி

கோவை: கோவையில் இன்று மாலை நடைபெறும் திமுக பொதுக்கூட்டத்திற்காக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கோவை வந்தார். தொடர்ந்து அவர் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

தமிழக வரலாற்றிலேயே இரக்கமற்ற மூர்க்கத்தனமான தான்தோன்றித்தனமான ஒரு ஆளுநர் ஆர்.என்.ரவி என்ற பெயரிலே இங்கு வந்து ஆட்டம் போட்டு கொண்டிருக்கிறார். தமிழக முதலமைச்சருக்கு தான் யாரை எந்த இலாகாவில் அமைச்சராக்குவது என்ற அதிகாரம் உள்ளது.

செந்தில் பாலாஜியின்  இலாகாக்களை பிரித்து கொடுத்ததை ஆளுநர் ஏற்காதது அதிக பிரசிங்கி தனமானது மட்டுமல்ல அயோக்கியத்தனமானது.

தமிழகத்தில் ஆட்சியை சீர்குலைக்க எந்தளவிற்கு  முடியுமோ அந்தளவிற்கு மத்திய சர்க்காரின், பாஜகவின் உளவாளியாக, ஏஜெண்டாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் ஆர்.என்.ரவி,சட்டத்திற்கு விரோதமாக அவர் வகிக்கும் அதிகாரத்திற்கு விரோதமாக எல்லாம் பேசி கொண்டிருக்கிறார். முதல்வரை போல் செயல்படுகிறார்.

மக்கள் முதலமைச்சராக தேர்ந்தெடுத்தது  ஸ்டாலினைத்தானே தவிர ஆர்.என் ரவியை அல்ல. அவர் ஒரு
மத்திய சர்க்காரின் ஊழியர் முதல்வர் அல்ல. மத்திய சர்க்காரின் வேலைக்காரர் ஒரு ஊழியக்காரர் என்பதை ஆளுநர் மறந்து விடக்கூடாது.

மத்திய எல்லா இடங்களிலும் பாஜகவை கொண்டு வர முயல்கிறார்கள். ஜனநாயகத்திற்கு எதிராக செயல்பட்டு இந்தியாவை கைப்பற்ற வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஜனநாயகத்திற்கு எதிரான ஒரு சர்வாதிகாரத்தை நரேந்திர மோடி அரசு நிலைநாட்ட நினைக்கிறது அதில் தோற்றுப் போவார்கள்.

இவ்வாறு வைகோ பேசினார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe