கோவையில் வீடு புகுந்து செல்போன் திருடிய வாலிபர்கள்

published 1 year ago

கோவையில் வீடு புகுந்து செல்போன் திருடிய வாலிபர்கள்

கோவை: கோவையில் வெவ்வேறு பகுதிகளில் வீடுகளில் புகுந்து செல்போன் திருட்டில் ஈடுபட்ட 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

கோவை புல்லுக்காடு தெற்கு உக்கடத்தை சேர்ந்தவர் திருமலைசாமி மகன் புகழேந்தி (19). இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.எஸ்.சி., ஐ.டி. படித்து வருகிறார். இந்நிலையில், சம்பவத்தன்று இரவு புகழேந்தி தனது வீட்டில் தூங்கி கொண்டிருந்தார்.

பின்னர் காலையில் எழுந்து பார்த்த போது, தனது செல்போனை காணவில்லை. நள்ளிரவில் நைசாக வீடு புகுந்த மர்மநபர்கள் செல்போனை திருடி சென்றது தெரியவந்தது. 

இதனால், அதிர்ச்சியடைந்த புகழேந்தி கடைவீதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிந்து செல்போன் திருடிய நபரை தேடி வந்தனர்.

இந்நிலையில், அதேபகுதியை சேர்ந்த 2 வாலிபர்கள் மீது செல்போன் திருடியதாக புகழேந்தி மற்றும் அவரது நண்பர்களுக்கு சந்தேகம் எழுந்தது. நேற்று 2 வாலிபர்களை பிடித்து புகழேந்தி நண்பர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் விசாரித்தார். அப்போது அவர்கள் தாங்கள் செல்போனை திருடவில்லை என முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார்.

இதைத்தொடர்ந்து 2 பேரையும் கடைவீதி போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் 2 பேரும் தொடர் செல்போன் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. 

மேலும் இதேபோல், அவர்கள் இருவரும் தெற்கு உக்கடம் பகுதியில் வசித்து வரும் மேற்கு வங்காளத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி நூருலாம் (29) என்பவரது வீட்டுக்குள் புகுந்து செல்போன் திருடியதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் தொடர் செல்போன் திருட்டில் ஈடுபட்டு வந்த கோவை உக்கடம் புல்லுக்காட்டை சேர்ந்த சஞ்சய் (20), மலுமிச்சம்பட்டி ஹவுசிங் யூனிட்டை சேர்ந்த கார்த்தி (34) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். 

பின்னர் இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe