கோவையில் புதிய வேலை வாய்ப்புகள்.. சூலூர் அருகே 1.31 லட்சம் சதுரடியில் பிரம்மாண்ட கிடங்கை அமைத்தது டி.வி.எஸ் நிறுவனம்

published 1 year ago

கோவையில் புதிய வேலை வாய்ப்புகள்.. சூலூர் அருகே 1.31 லட்சம் சதுரடியில் பிரம்மாண்ட கிடங்கை அமைத்தது டி.வி.எஸ் நிறுவனம்

கோவை:  டி.வி.எஸ் தொழில் மற்றும் தளவாடபூங்காக்கள் நிறுவனம்  (TVS Industrial & Logistics Parks) சூலூர் பகுதியில் வரும் பல்லடம் - கொச்சின்சாலை அருகே பன்னாட்டுஉணவு துறை நிறுவனமான நெஸ்லே-வின் (NESTLE) தேவைக்கேற்ப1.31 லட்சம் சதுரடியில் பிரத்தியேகமான ஒருகிடங்கை (Warehouse) வெறும் 4.5 மாத காலத்திற்குள்சிறப்பாக கட்டிமுடித்து 14.5.2023 ஒப்படைத்துள்ளதை அறிவித்தது.  

இது சூலூர் பகுதியில்அமைந்திருப்பதால் தென் பகுதி சந்தைகளுக்கு இங்கிருந்து பொருட்களை எடுத்து சென்று வாடிக்கையாளர்களை அடைய வசதியாக இருக்கும். இந்த கிடங்கில்நெஸ்லே நிறுவனத்திற்கு தேவையானகுளிரூட்டும் வசதிகள் கச்சிதமாக வழங்கப்பட்டுள்ளது.  

நெஸ்லே நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு ஏற்ப வெப்பநிலையை மாற்றிக்கொள்ள வசதிகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த கிடங்கு மூலம் கிட்டத்தட்ட250 பேருக்கு  வேலைவாய்ப்புகள் கிடைக்கும்  நெஸ்லே உடனான கூட்டு டி.வி.எஸ் தொழில் மற்றும் தளவாட பூங்காக்கள் நிறுவனத்திற்கு பெருமைமிகு மைல்கல்லாக மட்டும் நின்றுவிடாமல்ஒரு நிறுவனத்திற்கான தனிதேவைகளை உள்ளடக்கிய கிடங்கைகுறித்த நேரத்தில் கட்டிமுடித்துவழங்கும் திறன் கொண்டுவிளங்குவதையும்  கோவைமாவட்டத்தில் அதன் கால்தடம்விரிவடைந்து வருவதையும் உணர்த்துகிறது.  

இதுபற்றி டி.வி.எஸ் தொழில்மற்றும் தளவாட பூங்காக்கள்நிறுவனத்தின் COO, மணிகண்டன்ராமச்சந்திரன் கூறுகையில்:  

" உலகின்மிகப்பெரிய FMCG நிறுவனங்களில் ஒன்றின் கிடங்குதேவைகளை பூர்த்தி செய்யநாங்கள் உதவுகிறோம் என்பதுஎங்களுக்கு ஒரு பெரியமைல்கல் ஆகும். நாங்கள்கோவையில் இதே போலஅதிகமான கூட்டு அமைத்திடவும்இப்பகுதியில் பலரும் வேலைவாய்ப்புவழங்கிடவும் விரும்புகிறோம்," என்றார்.  நெஸ்லே இந்தியாவின் செய்தித் தொடர்பாளர்பேசுகையில், "கோயம்புத்தூரில் உள்ள மிகசரியான இடத்தில் அமைந்துள்ள இந்த கிடங்குஎங்கள் விநியோக சங்கிலியில்ஒரு முக்கிய இணைப்பாகசெயல்படும் என்று நாங்கள்நம்புகிறோம்,

இது எங்கள்மதிப்பிற்குரிய விநியோகஸ்தர்கள் மற்றும் மதிப்புமிக்க நுகர்வோருக்குதடையற்ற மற்றும் சரியானநேரத்தில் டெலிவரி செய்வதை உறுதிசெய்யஉதவுகிறது. 5 மாதங்களுக்குள் இதை வழங்கமுடிந்த TVS இண்டஸ்ட்ரியல் & லாஜிஸ்டிக்ஸ் பூங்காக்களுடன் கூட்டமைத்ததற்காகநாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்,"

எனதெரிவித்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe