கோவையில் 7 ஆண்டுகளுக்கு பிறகு துவங்குகிறது 'தி கிரேட் பாம்பே சர்க்கஸ்'.. டிக்கெட் விலை என்ன? - முழு விவரம் இதோ

published 1 year ago

கோவையில் 7 ஆண்டுகளுக்கு பிறகு துவங்குகிறது 'தி கிரேட் பாம்பே சர்க்கஸ்'.. டிக்கெட் விலை என்ன? - முழு விவரம் இதோ

கோவை : கோவையில் 7 ஆண்டுகளுக்குப் பிறகு 'தி கிரேட் பாம்பே சர்க்கஸ்' மீண்டும் துவங்க உள்ளதாக சர்க்கஸ் நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.


உலகமெங்கும் பல லட்சக்கணக்கான மக்களால் கண்டு மகிழப்படும் புகழ் பெற்ற கிரேட் பாம்பே சர்க்கஸ் 6 ஆண்டுகளுக்கு பிறகு கோவை மக்களை மகிழ்விக்க மீண்டும் வருகிறது.

ஆசியாவின் மிகப்பெரிய சர்க்கஸ் நிறுவனமான இந்நிறுவனம் கிட்டத்தட்ட 102 ஆண்டுகளை இத்துறையில் நிறைவு செய்து வெற்றி நடை போட்டுக்கொண்டிருக்கிறது.

இந்தியாவில் உள்ள சர்க்கஸ் நிறுவனங்களில் இந்த நிறுவனம் மட்டும் தான் தென் ஆப்பிரிக்கா, துபாய், பிரான்ஸ், இலங்கை ஆகிய நாடுகளின் அரசாங்கங்களால் அழைக்கப்பட்டு அந்நாடுகளில் நிகழ்ச்சிகளை நடத்தி இருக்கிறது.

கோவை மாநகரில் பலமுறை நிகழ்ச்சிகளை நடத்தி இங்கு மக்களின் ஆதரவை பெற்ற இந்நிறுவனம் கடைசியாக 2017 வ.உ.சி மைதானத்தில் அதன் நிகழ்ச்சியை நடத்தியது.

தற்போது அதே இடத்திற்கு வியக்கவைக்கும் புது சாகசங்களுடன், புது குழுவுடன் புத்துணர்ச்சியுடன் மீண்டும் களம் காண உள்ளது.

இதுகுறித்து கிரேட் பாம்பே சர்க்கஸ் நிறுவனத்தின் பார்ட்னராக உள்ள சஞ்சீவ் கூறுகையில்:-

நாங்கள் எங்கள் சர்க்கஸ் நிகழ்ச்சிகளை வரும் 23ம் தேதி முதல் அடுத்த ஒரு மாதத்திற்கு நடத்த உள்ளோம்.

ஒவ்வொரு நாளிலும் மதியம் 1 மணி, 4 மணி மற்றும் மாலை 7 மணி என மூன்று காட்சிகள் இடம்பெறும். ஒவ்வொரு காட்சியும் 2 மணி நேரம் 20 நிமிடம் நடைபெறும்.

அவற்றில் 30க்கும் அதிகமான சாகச நிகழ்ச்சிகள் நடைபெறும். இம்முறை 15க்கும் அதிகமான புதிய சாகசங்கள் நிகழ்வில் சேர்க்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் முதல்முறையாக உலக சர்க்கஸ் போட்டிகளில் பங்கு பெற்று வெங்கல பதக்கம் பெற்ற எத்தியோப்பியா நாட்டை சேர்ந்த கலைஞர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.

மணிப்பூரிலிருந்து எட்டு உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குழுவும் இந்தியா மற்றும் நேபாள் ஆகிய நாடுகளில் இருந்து வரக்கூடிய புகழ்பெற்ற கலைஞர்களும் இந்த சர்க்கஸ் நிகழ்ச்சியில் பலவிதமான சாகசங்களை செய்து காண்போரை ஆச்சரியத்துக்குள்ளாக்க காத்திருக்கின்றனர்.

பார்வையாளர்களின் சௌகரியத்திற்காக சாகசம் நடைபெறும் கூடாரம் குளிரூட்டப்படும். இந்த கூடாரம் நெருப்பு மற்றும் மழையை எதிர்க்கக் கூடியது.

டிக்கெட்டுகளை முன் பதிவு செய்வதற்கான அறிவிப்புகள் விளம்பரங்களாக

வெகுவிரைவில் வெளியாகும்.

டிக்கெட்டுகளின் விலை ரூ.100 முதல் ரூ 400 வரை நிர்ணயம்

செய்யப்பட்டுள்ளது. 400ரூபாய் டிக்கெட்டுகளுக்காக தொலைபேசி மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம். மற்ற ரூ.100, 200, 300 ஆகிய டிக்கெட்டுகளை நிகழ்ச்சி நடைபெறுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பே வ.உ.சி. மைதானத்திற்கு வந்து பெற்றுக் கொள்ளலாம்.

ரூ.400 டிக்கெட்டை முன்பதிவு செய்ய அழைக்க வேண்டிய எண் 889360 6308. 87788 380 82, 87142 85256.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe