நட்சத்திர ஜோடி ஆலியா பட் ரன்பீர் கபூர் திருமணம்

published 2 years ago

நட்சத்திர ஜோடி ஆலியா பட்  ரன்பீர் கபூர் திருமணம்

டியர் ஜிந்தகி, ஹைவே, 2 ஸ்டேட்ஸ் போன்ற ஹிந்தி படங்களில் கதாநாயகியாக நடித்துள்ள ஆலியா பட்டும் (29) ராக் ஸ்டார், மை டியர் ஸிட், ஹே ஜவானி ஹே திவாணி போன்ற பிரபல படங்களில் கதாநாயகனாக நடித்துள்ள ரந்பீர் கபூரும் (39) இன்று திருமணம் செய்துகொண்டனர்.

4 வருடங்களாக காதலித்து வந்த இந்த ஜோடியின் திருமணம், பாலிவுட் திரையுலகத்தினர் அனைவரும் மிக ஆவலாக எதிர்பார்த்த ஒன்று என கூறலாம். 11 வயது சிறுமியாக ஆலியா பட் ரந்பீர் கபூரை துணை இயக்குநராக முதலில் பார்த்த பொழுதிலிருந்தே அவரை விரும்பி வந்தார் எனவும் பல நேர்காணல்களில் ரன்பீரின் மேலுள்ள காதல் பற்றி பேசியுள்ளார் என்பதும் 2018ஆம் ஆண்டு இவர்கள் விரும்புவதை அதிகார பூர்வமாக அறிவித்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவர்களின் திருமணம் மும்பையிலுள்ள 'வாஸ்து' என்ற பெயரிடப்பட்ட அவர்களின் வீட்டில் நடைபெற்றது. அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டும் பங்குபெற்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe