கோவையில் எத்தனை டாஸ்மாக் கடைகள் மூடப்படுகின்றன தெரியுமா?

published 1 year ago

கோவையில் எத்தனை டாஸ்மாக் கடைகள் மூடப்படுகின்றன தெரியுமா?

கோவை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜியால் சட்டப்பேரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை மாநில கோரிக்கையின் போது தமிழகம் 500 மதுபான சில்லறை விற்பனை கடைகள் கண்டறியப்பட்டு மூடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி 500 கடைகள் கண்டறிந்து அவற்றை மூடுவதற்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கடந்த ஏப்ரல் மாதம் 500 மதுபான சிலரை விற்பனை கடைகளில் கண்டறிந்த நிலையில் தற்போது கடைகள் அனைத்தும் மூடப்படுவதாகவும், நாளை முதல் இக்கடைகள் செயல்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி கோவை மண்டலத்தில் 20 கடைகள் மூடப்பட உள்ளன. கோவை வடக்கு மண்டலத்தில் பத்து  கடைகளும் (கடை எண்: 1528, 1538, 1544, 1511, 1570, 1585, 1627, 1687, 1720, 2214) தெற்கு மண்டலத்தில் பத்து கடைகளும் (கடை எண்: 1654, 1655, 1658, 1664, 1680, 1702, 1760, 1975, 2286, 2234) மூடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe