காலை உணவிற்கு வாழைப்பழத்தில் இந்த வகை பழம் போதும்..!

published 1 year ago

காலை உணவிற்கு வாழைப்பழத்தில் இந்த வகை பழம் போதும்..!

கோவை: பச்சை வாழைப்பழம், செவ்வாழை, நேந்திரம் ஆகிய பழங்களை மட்டும் "குறைந்த அளவு" சாப்பிடலாம் என்று டாக்டர்கள் சொல்கிகற்பூரவள்ளி வாழைப்பழம் என்றில்லை, பெரும்பாலான வாழைப்பழங்களைச் சர்க்கரை நோயாளிகள் சாப்பிட முடியாது. .. இவர்களைத் தவிர, வேறு யாருமே தவிர்க்கக் கூடாத பழம் கற்பூரவள்ளி வாழைப்பழம்.

பொதுவாக, வாழைப்பழத்தில் என்னென்ன சத்துக்கள் உள்ளது என்பதை அறிந்தாலே அதன் மகத்துவம் தெரிந்துவிடும்.. வாழைப்பழத்தில் பொட்டாசியம், வைட்டமின் ஏ, வைட்டமின் பி 6, வைட்டமின் சி, நார்ச்சத்துக்கள், மக்னீசியம், போன்றவை அடங்கி உள்ளன..

ஒரே ஒரு பழுத்த வாழைப்பழத்தில் மட்டும், மனித உடலுக்குச் சக்திவாய்ந்த எலும்புகளையும் தசைகளையும் உற்பத்தி செய்ய, ஒரு நாளைக்குத் தேவைப்படும் பொட்டாசியத்தின் அளவில் 11 சதவிகிதம் உள்ளது என்கிறார்கள்.
வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும், இதுவே ஆரஞ்சு, திராட்சை போன்ற பழங்களோடு சேர்த்துச் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்காது என்கிறார்கள்.

கற்பூரவள்ளி: இதில், மருத்துவ குணம் கொண்ட கற்பூரவள்ளி வாழைப்பழம் கூடுதல் பலன் தரக்கூடியது. இதற்குத் தேன் வாழைப்பழம் என்றும் இன்னொரு பெயர் உண்டு.. பார்ப்பதற்கு சிறியதாக இருக்கும். ஆனால், சத்துக்களும், சுவையும் அபரிமிதமாக இருக்கும்..

சாம்பல் கலந்த பச்சை கலரிலும், மஞ்சள் நிறத்திலும் இந்த பழங்கள் காணப்படும்.. இதன் தோல், கருத்துவிட்ட பின்பும், இந்த பழம் சாப்பிடக்கூடியது.. ருசி அப்போதும் மாறாது.. அதேபோல, இந்த பழத்தின் நடுவில் விதைகள் சற்று அதிகமாகவே காணப்படும். பழத்துடன் சேர்த்து, இந்த விதையை மெல்லும்போது, தனிருசி கிடைக்கும்.

சாம்பல் கலந்த பச்சை கலரிலும், மஞ்சள் நிறத்திலும் இந்த பழங்கள் காணப்படும்.. இதன் தோல், கருத்துவிட்ட பின்பும், இந்த பழம் சாப்பிடக்கூடியது.. ருசி அப்போதும் மாறாது.. அதேபோல, இந்த பழத்தின் நடுவில் விதைகள் சற்று அதிகமாகவே காணப்படும். பழத்துடன் சேர்த்து, இந்த விதையை மெல்லும்போது, தனிருசி கிடைக்கும்.

எடை குறைப்பு: இந்த கற்பூரவள்ளியில், பொட்டாசியம், சோடியம், வைட்டமின் பி - 6, மற்றும் நார்ச்சத்துக்கள் அடங்கியது. இவை அனைத்துமே உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.. இதில் அதிக அளவு செரட்டோனின், நார் எபினெஃப்ரின் சத்துக்கள் நிறைந்துள்ளதால், ஜீரண சக்தியை அதிகரிக்க உதவுகிறது... கால்சியம் அதாவது, மேங்கனீஷ், மெக்னிஷியம் மிகுதியாக உள்ளதால், எலும்புகளுக்கு நன்மை பயக்கிறது. வலு சேர்க்கிறது.

அதேபோல, உடல் ஆரோக்கியத்திற்கும், ரத்த விருத்திக்கும், மூளை வளர்ச்சிக்கும், தோலில் ஏற்படும் சொறி, சிரங்குகள், புண்கள் விரைவில் ஆறுவதற்கும், கற்பூரவள்ளியே பெரிதும் துணைநிற்கிறது.. 

தலைபாரம் அதிகமாக உள்ளவர்கள், கற்பூரவள்ளி பழத்தைச் சாப்பிட்டால் நிவாரணம் கிடைக்கும். கற்பூரவள்ளி வாழைப்பழம் சாப்பிடுவதால் கண்களில் இருக்கும் சூட்டைத் தனித்து கண்களைக் குளிர்ச்சியாக வைத்திருக்கும்.

மன அழுத்தம்: எத்தனையோ பேர், நேரமின்மை, டயட் இப்படி எத்தனையோ காரணங்களுக்காகக் காலை நேரத்தில் சாப்பிடுவதில்லை.. காலை நேர உணவை தவிர்ப்பவர்களுக்கு இந்த கற்பூரவள்ளி பேருதவி புரிகிறது. காலையில் இந்த பழத்தைச் சாப்பிடும்போது, நாள் முழுவதும் ஆற்றலை தருகிறது.. களைப்பை அண்டவிடாது.. முக்கியமாக மன அழுத்தத்தையும் அண்டவிடாது.. ஏழைகளும் வாங்கி சாப்பிடக்கூடிய, இயற்கை பொக்கிஷம்தான் இந்த கற்பூரவள்ளி வாழைப்பாம்..!!

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe