மருதமலை சாலையில் விளையாடும் குட்டி யானைகள் - Video

published 1 year ago

மருதமலை சாலையில் விளையாடும் குட்டி யானைகள் - Video

கோவை: கோவை மருதமலை சாலையில் யானைகள் முகாமிட்டு நிலையில், சாலையில் குட்டி யானைகள் விளையாடும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கோவை மாவட்டம் ஆனைகட்டி, தடாகம், மாங்கரை, பெரியநாயக்கன் பாளையம், மருதமலை ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக யானைகள் கூட்டம் கூட்டமாக நடமாடி வருகிறது.

இந்நிலையில் மருதமலைக்கு செல்லும் பக்தர்கள் மலைப் பாதையில் நடந்து செல்ல மாலை 5 மணிக்கு மேல் அனுமதி இல்லை என்றும், இருசக்கர வாகனங்களில் செல்லும் நபர்களுக்கு காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் தான் அனுமதி என்றும் வனத்துறை அறிவித்தது.  கடந்த சில தினங்களுக்கு முன்பு மருதமலை அடிவாரம் ஐ.ஓ.பி காலனி பகுதியில் யானை தாக்கி குமார் என்பவர் உயிரிழந்த நிலையில் வனத்துறையினர் இந்த அறிவிப்பை வெளியிட்டனர்.

இந்நிலையில் வனத்துறையினர் ஒலிபெருக்கி மூலம் யானை நடமாடும் பகுதிகளுக்குச் சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி யானை நடமாடும் பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் கோவை மருதமலை சாலையில் உள்ள ஐ.ஓ.பி காலனி பகுதியில் இரவு யானைக் கூட்டம் சாலையோரம் முகாமிட்டிருந்த நிலையில் இரண்டு குட்டி யானைகள் சாலையின் நடுவே விளையாடிக் கொண்டு இருக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

Video : https://youtu.be/9b96c35t9Xc

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe