கோவையில் ஒரே நாளில் 113 கோடி மதிப்பில் சாலைகளை சீரமைக்கும் பணி துவக்கம்

published 2 years ago

கோவையில் ஒரே நாளில் 113 கோடி மதிப்பில் சாலைகளை சீரமைக்கும் பணி துவக்கம்

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும் : https://chat.whatsapp.com/BD91mw8tExzL8KfiPGY4km

கோவை: கோவையில் பல்வேறு சாலை பணிகள் ரூ.113 கோடியில் இன்று துவங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார்.

கோவையில் சாலை விரிவாக்கம், பழுதடைந்த சாலைகள் சீர் படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு திட்ட பணிகள் அமைச்சர் செந்தில்பாலாஜி இன்று துவக்கி வைத்தார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கோவையில் 53 நகர்நல மையங்கள் கட்டிடம் கட்ட ஒப்புதலையும், ஏற்கனவே உள்ள நகர்நல மையங்களை மேம்படுத்த ஒப்புதலையும் முதலமைச்சர் வழங்கியுள்ளார். 53 நகர் நல மையங்கள்  அமைக்க தலா ரூ.25 லட்சம் நிதி ஒதுக்கி பணி துவங்கப்பட்டுள்ளது. மொத்தமாக கோவையில் 63 நகர்நல மையத்திற்கான பணிகள் நடைபெறுவது இதுவே முதல் முறை.

கோவை மாநகராட்சியின் பல்வேறு சாலைகள் பழுதடைந்துள்ள சூழலில் கோவை வந்த  முதலமைச்சர் ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவித்தார். ஏற்கனவே 198 கோடியில் சாலை அமைக்கும் பணிகள்  துவங்கப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் 113 கோடி மதிப்பில் சாலைகள் அமைக்க பணி துவங்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் முழுவதும் சாலை பணிகளுக்கு முன்னுரிமை, இரண்டு நடக்ளுக்கு ஒருமுறை சீரான குடிநீர் என்ற உத்தரவுகளை முதலமைச்சர் வழங்கியுள்ளார்.

சென்னை தமிழகத்தின் தலைநகராக இருந்தாலும், கோவை தொழில்துறை தலை நகராக உள்ளது. ரூ.1132 கோடியில் விமான நிலைய விரிவாக்கம் மேற்கொள்ளப்படுகிறது. தற்போது ரூ.800 கோடி அளவில் செலவிடப்பட்டு நிலம் எடுக்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள நிலங்கள் அடுத்த 3 மாதங்களில் எடுக்கப்படு பணிகள் நடைபெறும்.

தொழில்துறையுடன் முதலமைச்சர் 3 மணி   நேரம் அமர்ந்து அவர்களது கருத்துகளை கேட்டுள்ளார். அதனை செயல்படுத்த உத்தரவுகளையும் வழங்கியுள்ளார்.

தமிழகத்திற்கு கடன் சுமைகள் உள்ளன. அதனை சீரமைக்கும் பணிகள் நடக்கிறது. மக்கள் 1.41 லட்சம் மனுக்கள் கொடுத்துள்ளனர். 25 ஆயிரம் மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டு மற்ற மனுக்கள் மீது தீர்வுகான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கட்டி முடிக்கப்பட்ட மேம்பாலங்களை விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அந்தந்த வார்டுகளில் செயல்படுத்த வேண்டிய திட்டங்களை கணக்கெடுக்க ஆணையரிடம் வலியுறுத்தியுஉள்ளோம். 15 நாட்களில் திட்ட வரையறை தயாரிக்கப்படும். வரும் 5 ஆண்டுகளுக்கும், அடுத்த 5 ஆண்டுகளுக்குமன திட்ட அறிக்கை தயாரிக்கப்படுவது முதல் முறையாக நடக்கிறது.

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி செய்யாமல் தனியாரிடம் வாங்குவதாக கூறுகின்றனர். ஆனால் அன்றே தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 5 நாட்கள் உற்பத்தி செய்த மின் அளவை நான் கூறினேன். நாங்களும் இருக்கிறோம் என்று காட்டுவதற்காக கூறுகின்றனர். இதற்கு விடை கேட்டு சொல்ல வேண்டும். ஆவணத்துடன் குற்றம்சாட்ட  வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.  

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe