கோவையில் நாளை நடக்கிறது குடிமைப்பணிகள் தேர்வு..!

published 2 years ago

கோவையில் நாளை நடக்கிறது குடிமைப்பணிகள் தேர்வு..!

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும் : https://chat.whatsapp.com/BD91mw8tExzL8KfiPGY4km

குடிமை பணிக்கான் முதல் நிலை தேர்வை கோவையில் 24 மையங்களில் 9,447 பேர் நாளை (ஞாயிற்றுக்கிழமை) எழுதுகிறார்கள்.

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தால் குடிமை பணிக்கான முதல் நிலை தேர்வு நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. கோவை மாவட்டத்தில் இந்த தேர்வை 9 ஆயிரத்து 447 பேர் தேர்வு எழுத உள்ளனர். இதற்காக 24 மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது.'

இந்ததேர்வை கண்காணிக் கும் பணி கலெக்டர் சமீரன் தலைமையில் 8 துணை கலெக்டர்கள், 24 தாசில்தார்கள், 40 துணை தாசில்தார்கள், 414 அறைகண்காணிப்பாளர்கள் ஈடுபடுகிறார்கள்.

தேர்வை பார்வையிட மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவசண்முகராஜா, டாக்டர் வள்ளலார் ஆகியோர் சிறப்பு பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இது தொடர்பாக கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- 

அடையாள அட்டை வேண்டும்.

கோவை மாவட்டத்தில் 24 மையங்களில் குடிமை பணிக் கான முதல் நிலை தேர்வு நாளை நடத்தப்படுகிறது. காலை தேர்வுக்கு காலை 8.30 மணிக்குள்ளும், மதிய தேர் வுக்கு பிற்பகல் 1.30 மணிக்குள் ளும் தேர்வு மையங்களுக்கு வந்து விட வேண்டும். அதன் பின்னர் வருபவர்கள் அனும திக்கப்பட மாட்டார்கள்.

தேர்வு வளாகத்துக்குள் செல்போன், டிஜிட்டல் கைக் கடிகாரம் உள்ளிட்டவை களை எடுத்து வர அனுமதி இல்லை. கருப்பு மை பந்து முனை பேனா மட்டுமே பயன்படுத்த வேண்டும். இணைய தளம் மூலம் பதிவி றக்கம் செய்த புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டைகள், ஆதார், ஓட்டுனர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, பான்கார்டு, பாஸ்போர்ட் ஆகியவற்றில் ஏதாவது ஒன்று மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றை எடுத்து வர வேண்டும்.

சிறப்பு பஸ்கள் வசதி

தேர்வு மைய வளாகத்துக்குள் கொரோனா தொடர்பான அரசு வழிகாட்டு நெறி முறைகளின்படி முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை தேர்வு எழுதுபவர்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். தேர்வு மையங்களில் செல்போன் ஜாமர்கள் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.

தேர்வு மையங்களுக்கு உக்கடம், சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம், சூலூர், பொள்ளாச்சி போன்ற பஸ் நிலையங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் வசதியும் செய் யப்பட்டு உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe