கலைஞர் நூற்றாண்டு விழா- கோவையில் மருத்துவ முகாம்கள்

published 1 year ago

கலைஞர் நூற்றாண்டு விழா- கோவையில் மருத்துவ முகாம்கள்

கோவை : கலைஞரின் நூற்றாண்டு விழா சிறப்பு நிகழ்வாக கோவையில் இன்று  மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகிறது.

கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை சிறப்பிக்கும் வகையில் கோவை மாவட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் இன்று பன்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இம்முகாம்கள் காரமடை தோலம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி, கணுவாய் அரசு நடுநிலைப்பள்ளி, பொள்ளாச்சி சமத்தூர் இராம ஐயங்கார் அரசு மேல்நிலைப்பள்ளி, குனியமுத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, வடவள்ளி மருதமலை சுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானம் அரசு மேல்நிலைப்பள்ளி, சூலூர் கண்ணம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் நடைபெற்று வருகிறது.

இம்மகாமல் இரத்த அழுத்த பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை, எக்கோ மற்றும் இசிஜி, பெண்களுக்கான மார்பக புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை, உள்ளிட்ட பரிசோதனைகளுடன் முழு ரத்த பரிசோதனையும் இலவசமாக மேற்கொள்ளப்படுகின்றன. 

மேலும் சித்த மருத்துவம் மற்றும் ஆயுர்வேத சிகிச்சை ஆலோசனைகளும் வழங்கப்படுகிறது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe