சங்க உறுப்பினர்களை வாக்கு வாங்கியாக பார்க்கின்றனர்.. பாஜக, அமைப்பு சாரா தொழிற்சங்க மாநில தலைவர் பாண்டி துறை

published 1 year ago

சங்க உறுப்பினர்களை வாக்கு வாங்கியாக பார்க்கின்றனர்.. பாஜக, அமைப்பு சாரா தொழிற்சங்க மாநில தலைவர் பாண்டி துறை

அமைப்பு சாரா தொழிலாளர் சங்க உறுப்பினர்களை ஒரு வாக்கு வங்கியாகவே மாற்று கட்சியினர் பார்க்கின்றனர் என்று கோவை சாய்பாபா காலனியில் பாஜக, அமைப்பு சாரா தொழிற்சங்க மாநில தலைவர் பாண்டி துறை தெரிவித்துள்ளார்.


பாரதிய ஜனதா கட்சியின் அமைப்பு சாரா தொழிலாளர் சங்கத்தின் சாய்பாபாகாலனி எம்ஜிஆர் மார்கேட் கிளை, இன்று கோவை மேட்டுப்பாளையம் சாலை, சாய்பாபா காலனி எம்ஜிஆர் மார்க்கெட் பகுதியில் இன்று துவக்க பட்டத், இந்த நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பாரதிய ஜனதா கட்சியின்  அமைப்பு சாரா தொழிற்சங்க மாநில தலைவர் பாண்டித்துரை, தொழிற்சங்க கொடியை ஏற்றி வைத்து, பாரதிய ஜனதா அமைப்பு சாரா தொழிலாளர்கள் சங்கத்தின் கிளையை   துவக்கி வைத்தார்.

இதனை தொடர்ந்து  செய்தியாளர்களை சந்தித்து பேசிய, அவர் கூறியதாவது.... 
அமைப்பு சாரா தொழிலாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகளை அனைத்து கட்சியினரும், ஒரு வாக்கு வங்கியாகவே பார்ப்பதாகவும், அவர்களை மதிப்பதில்லை, அவர்களின் குறைகளை கேட்பதில்லை, அதனை நிவர்த்தி செய்ய முன் வருவதில்லை  ஆனால் நமது பாரதிய ஜனதா அமைப்பு சாரா தொழிலாளர் சங்கமானது, பதிவு எண் 3503/ சி என் ஐ என்ற பெயரில் இயங்கி வருகின்றது, இச்சங்கத்தின் மூலமாக அனைத்து தொழிலாளர்களையும் ஒன்றாக இணைக்க இச்சங்கம் பாடுபடுவதாகவும் அவர்கள் குறைகளை கலைந்து , அவர்களுக்கு தேவையானவற்றை பூர்த்தி செய்வது இச்சங்கத்தின் நோக்கம் என்று தெரிவித்தார், இந்த நிகழ்ச்சியில் கோவை மாவட்ட தலைவர் புவனேஸ்வரண் உள்ளிட்ட பாரதிய ஜனதா கட்சியினர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது,

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe