தக்காளி விலை கிடுகிடு உயர்வு தக்காளி சட்னியை நிறுத்திய ஓட்டல்கள்..!

published 1 year ago

தக்காளி விலை கிடுகிடு உயர்வு தக்காளி சட்னியை நிறுத்திய ஓட்டல்கள்..!

கோவை: சென்னையில் தக்காளி விலை கடுமையாக உயர்ந்து உள்ளது. கிலோ ரூ.80 முதல் ரூ.100 வரை விற்கிறது. வரத்து குறைவால் இந்த விலை உயர்வு ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. 

இந்த விலை உயர்வு காரணமாக வீடுகளில் தக்காளி ரசத்தை கடந்த சில நாட்களாக இல்லத்தரசிகள் கைவிட்டு விட்டார்கள். ஓட்டல்களிலும் வழக்கமாக தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, மல்லி சட்னி இடம் பிடித்திருக்கும். 

ஆனால் இப்போது விலை உயர்வு காரணமாக கடந்த சில நாட்களாக ஓட்டல் மெனுவிலும் தக்காளி சட்னி இல்லை. விலை உயர்வு காரணமாக தக்காளி சட்னி கிடையாது. என்றே வாடிக்கையாளர்களிடம் கூறுகிறார்கள்.

 குறைந்தது இன்னும் 2 வாரங்களாவது தக்காளி சட்னிக்கு வாய்ப்பில்லை என்கிறார்கள். வரத்து அதிகரித்து விலை குறைந்த பிறகுதான் தக்காளி சட்னி இடம்பெறும் என்றனர். 

மதிய சாப்பாட்டிலும் சில ஓட்டல்களில் தக்காளி ரசத்துக்கு பதில் மிளகு ரசத்தை பயன்படுத்துகிறார்கள். ஓட்டல்களுக்கு சாப்பிட செல்லும் வாடிக்கையாளர்கள் தக்காளி ரசத்தை கையில் வாங்கி குடிப்பதும் உண்டு. ஆனால் இப்போது ஏமாந்து போகிறார்கள்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe