கோவையில் நடக்கப் போகிறது அசத்தப்போவது யாரு சீசன் 2..!

published 1 year ago

கோவையில் நடக்கப் போகிறது அசத்தப்போவது யாரு சீசன் 2..!

கோவை : தமிழ் 'டிவி' சேனல்களில், 'ரியாலிட்டி ஷோ'க்களின் முன்னோடி, 'கலக்கப்போவது யாரு' மற்றும் 'அசத்தப்போவது யாரு' நிகழ்ச்சிகள்.

இவற்றின் இயக்குனர் ராஜ்குமார், ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக மக்களை மனம் விட்டு சிரிக்க வைத்தவர்.'அசத்தப்போவது யாரு சீசன் 2' என்ற பெயரில், தமிழகத்தில் நகைச்சுவை மன்னர்களுக்கான தேடலைத் துவக்கியுள்ளார். 

2022 பிப்., முதல் மாநிலம் முழுக்க நடந்த தேடலில், 120 நகைச்சுவை கலைஞர்களை அடையாளம் கண்டு, அவர்களை, கோவையில் ஒரே மேடையில் அறிமுகம் செய்ய இருக்கிறார். 

இதில், கோவையைச் சேர்ந்த, 16 கல்லுாரி மாணவர்களும் அடங்குவர்.மதுரை முத்து, ஈரோடு மகேஷ், இமான் அண்ணாச்சி, கோவை அசோக், ரோபோ சங்கர், பாண்டியம்மாள், தங்கதுரை, நவீன் என, ராஜ்குமாரால் அறிமுகம் செய்யப்பட்ட ஏராளமான பிரபலங்களும்பங்கேற்கின்றனர்.

"ஜூலை 2ம் தேதி இந்துஸ்தான் கல்லுாரியில் அசத்தப்போவது யாரு சீசன்-2 நிகழ்ச்சி நடக்கிறது. 120 நகைச்சுவை கலைஞர்கள், 30க்கும் மேற்பட்ட பிரபலங்கள் என, 150 பேர் உங்களை சிரிக்க வைக்க வருகிறார்கள்.

இயக்குனர் சுந்தர்ராஜன், ஸ்வர்ணமால்யா, பிருத்விராஜ் உள்ளிட்டோர் நடுவர்களாக பங்கேற்கின்றனர். மகிழ்ச்சிக்கு, 100 சதவீதம் உத்தரவாதம். சிரிக்காமல் இருந்தால் லைப் டைம் செட்டில்மென்ட்,'' என, 'கான்பிடென்டாக' பேசுகிறார்கள், இயக்குனர் ராஜ்குமாரும், மதுரை முத்துவும்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe