சாதி படமல்ல.. வடிவேலு பொறுமையாக சாதித்துள்ளார் - மாமன்னம் படம் பார்த்த கோவை மக்கள் கருத்து | MAMANNAN Movie Review

published 1 year ago

சாதி படமல்ல.. வடிவேலு பொறுமையாக சாதித்துள்ளார் - மாமன்னம் படம் பார்த்த கோவை மக்கள் கருத்து | MAMANNAN Movie Review

கோவை : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியாகியுள்ள மாமன்னன் திரைப்படம் சாதி பெருமை பேசும் படமல்ல என்றும், நடிகர் வடிவேலு பொறுமையாக இருந்து சாதித்துள்ளார் என்றும், இது சமூக நீதியை காட்டும் படம் என்றும் படம் பார்த்த கோவையை சேர்ந்த பொதுமக்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

பரியேறும் பெருமாள் கர்ணன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில்,  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடிகர் வடிவேலு ஆகியோரது நடிப்பில் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இசையில் மாமன்னன் திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது

கோவை மாவட்டத்தில் பல்வேறு திரையரங்குகளில் திரைப்படம் வெளியாகி உள்ள நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் ரசிகர்கள் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடி திரைப்படத்தை வரவேற்றுள்ளனர்.

மேலும் மாமன்னன் திரைப்படம் வெளியாவதை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டுள்ளன. இதனிடையே படம் எப்படி இருக்கிறது? என்பது குறித்து மாமன்னன் திரைப்படம் பார்த்த பொதுமக்களிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு "மாமன்னன் சாதி பெருமை பேசும் படமல்ல. சமூக நீதியை காட்டும் படம். வடிவேலு பொறுமையாக இருந்து சாதித்துள்ளார். படத்தில் திரைக்கதை நடிப்பு இசை என அனைத்தும் அருமையாக உள்ளது. உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து நடிக்க வேண்டும்." என்று பொதுமக்கள் தங்களது கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

படம் பார்த்த பொதுமக்கள் பலரும் திரைக்கதை, இயக்கம் மற்றும்  நடிகர்களின்  நடிப்பை வெகுவாக பாராட்டியுள்ளனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe