கோவை மக்களே இந்த 'வீகெண்ட்' எங்க போலாமுன்னு யோசிக்கிறீங்களா?

published 2 years ago

கோவை மக்களே இந்த 'வீகெண்ட்' எங்க போலாமுன்னு யோசிக்கிறீங்களா?

கோவை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம் : https://chat.whatsapp.com/KsPYwSVgSwPDblO1iteFxE

கோவை: கோவையிலிருந்து இரண்டு மணி நேர தொலைவில் அமைந்துள்ள இயற்கை எழில் மிக்க அமைதியான சுற்றுலா தளமாக உள்ளது பரலிக்காடு. அத்திக்கடவு ஆற்றின் முக்கிய நீர்த் தேக்கமான பில்லூர் அணையைச் சுற்றியுள்ள வனப் பகுதியில் அமைந்துள்ளது இவ்விடம்.  

இச்சுற்றுலாத்தலம் வனச் சரகத்தில் உள்ளதால் வனத் துறையிடம் அனுமதி பெற்று மட்டுமே இங்கு செல்ல முடியும். இணையத்தில்   www.coimbatorewilderness.com  என்ற தளம் மூலமாகவும்,  [email protected]  என்ற மின்னஞ்சல் மூலமாகவும் அல்லது 9489968480 என்ற அலைபேசி எண்ணிலும் முன்பதிவு செய்யலாம். கோவையிலிருந்து சுமார் 65 தூரத்தில் அமைந்துள்ள இவ்விடத்திற்கு காந்திபுரம் பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து வசதி உள்ளது.

படகு சவாரி, மலை ஏற்றம், ஆற்றில் குளித்தல், காட்டிற்குள் நடைபயணம், மலை வாழ் மக்களின் சமையல் ஆகிய பொழுதுபோக்குகள் உள்ளன. பெரியவர்களுக்கு ரூ.550, சிறியவர்களுக்கு ரூ.450 என்ற கட்டணத்திற்கு மதிய உணவுடன் (சைவம் & அசைவம்) கூடிய ஒரு நாள் சுற்றுலா தொகுப்புகளும் ரூ.1500 கட்டணத்தில் தங்கும் வசதிகளும் வழங்கப்படுகின்றன.  குடும்பத்துடன் செல்ல ஏற்ற இடம் இது.

இந்த வீகெண்டுக்கு பரளிக்காடு சென்று பாருங்கள்.. 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe