மீண்டும் வந்தார் கோவையின் இளம் கவுன்சிலர்...! : எதனால் வரவில்லை தெரியுமா?

published 1 year ago

மீண்டும் வந்தார் கோவையின் இளம் கவுன்சிலர்...! : எதனால் வரவில்லை தெரியுமா?

கோவை: கோவை மாநகராட்சியில் 29.12.2022 மற்றும் 30.01.2023, 31.03.2023
(சிறப்புக்கூட்டம்) மற்றும் 15.05.2023 ஆகிய தேதிகளில் நடைபெற்ற
மாமன்ற சாதாரணக்
கூட்டங்களில் 97-ஆவது வார்டு கவுன்சிலர் நிவேதா தொடர்ந்து
மூன்று சாதாரணக் கூட்டங்களில் வருகை புரியாமல் இருந்து உள்ளார்.

நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் படி,
உறுப்பினர் பதவிக்காலமானது தொடங்கிய தேதியிலிருந்து அல்லது அவர் கடைசியாக
வருகை புரிந்துள்ள கடைசி கூட்டத் தேதியிலிருந்து தொடர்ந்து மூன்று மாநகராட்சியின் கூட்டங்களுக்கு அவர் வராதிருப்பராயின் அவர் பதவி வகிப்பதானது
அற்றுப்போதல் வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மேற்படி சட்டத்தின் படி கூட்டங்களில் பங்கேற்கத்
தவறியதின் விளைவாக, அவர் மன்றத்தவராக இருப்பது அற்றுப் போகிவிட்டது.


இதனிடையே
97-வது வார்டு கவுன்சிலர் நிவேதா
23.06.2023ம் தேதிய கடிதத்தில், தனக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால், கடந்த
15.05.2023 அன்று நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் பங்கேற்க இயலவில்லை என்றும், எனவே
தன்னை மீண்டும் 97-வது வார்டு கவுன்சிலராக ஏற்றுக்கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.

மாமன்ற உறுப்பினரின் வேண்டுகோளை மாமன்றத்தின்
முடிவுக்காக வைக்கப்பட்டது. அவருக்கு ஆதரவு கிடைக்கவே அவர் மீண்டும் சேர்த்துக்கொள்ளப்பட்டார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe