கோவை vs சென்னை ஒரு ஒப்பீடு.. வாழ்க்கை எங்கே சூப்பராக இருக்கும்?

published 1 year ago

கோவை vs சென்னை ஒரு ஒப்பீடு.. வாழ்க்கை எங்கே சூப்பராக இருக்கும்?

சென்னை: கோவை vs சென்னை வாழ்க்கை யாருக்கு எங்கே சூப்பராக இருக்கும் என்பது குறித்து சிறய ஒப்பீட்டினை இப்போது பார்ப்போம்.

சென்னையில் பிறந்தவர்கள் சென்னை வாழ்க்கை பெரிது என்றும், கோவையில் பிறந்தவர்கள் கோவை தான் பெரிது என்றும் கூறுவார்கள். ஆனால் சென்னைக்கோ, கோவைக்கோ பிழைக்க சென்றவர்களை கேட்டால் நிச்சயம் பதில் வேறாக இருக்கும்.

சென்னையில் திருமண வாழ்க்கையை தொடங்கியவர்களையும் கோவை திருமண வாழ்க்கையை தொடங்கியவர்களையும் நேராக கேள்வி கேட்டால், கோவையில் வாழ்பவர்கள் நிச்சயம் சூப்பராக இருப்பதாக கூறுவார்கள். ஆனால் சென்னையில் வாழ்பவர்கள் அவர்களை விட அதிகமான பணம் சம்பாதித்தாலும் வாழ்க்கை அவ்வளவு இனிமையாக இல்லை என்றே சொல்வார்கள். இதற்கு காரணம் இருக்கிறது.

சென்னையில் திருமண வாழ்க்கையை தொடங்கியவர்களையும் கோவை திருமண வாழ்க்கையை தொடங்கியவர்களையும் நேராக கேள்வி கேட்டால், கோவையில் வாழ்பவர்கள் நிச்சயம் சூப்பராக இருப்பதாக கூறுவார்கள்.

சென்னையில் ஒரு லட்சம் சம்பளத்தை எளிதாக ஐடியில் வேலை பார்ப்பவர்கள், உயர் நிறுவனங்களில் வேலைக்கு செல்பவர்கள் சில ஆண்டுகளிலேயே எட்டிவிட முடியும். ஆனால் வேலை உறுதிஇல்லை. எப்போது வேண்டுமானாலும் வேலைக்கு ஆபத்து ஏற்படும் அபாயத்துடனே வாழ வேண்டும்.

ஆனால் கோவையில் அப்படி இல்லை. ஒருவர் லட்சம் ரூபாய் சம்பளத்தை எட்ட பல வருடங்கள் ஆகலாம். ஆனால் வேலைக்கு ஆபத்து என்ற பேச்சுக்கே இடம் இல்லை. வாழ்வாதார செலவுகளும் கோவையில் குறைவாகவே இருக்கும். கோவையில் ஒருவர் 30 ஆயிரம் வாங்குகிறார் என்றால், அவரது மனைவி 15 ஆயிரம் அல்லது 20 ஆயிரம் வாங்குகிறார் என்றால், மொத்தம் 45 ஆயிரம் ரூபாயில் கோவை மற்றும் கோவை புறநகர் பகுதியில் வாழ்க்கையை சிறப்பாக நடத்த முடியும்.

குடிபழக்கம் இல்லாவிட்டால், ஊதாரியாக இல்லாவிட்டால் அவர்கள் பெரிய அளவில் சேமிக்கவும் முடியும். சென்னையை ஒப்பிடும் போது கோவையில் வாடகை குறைவு தான். புறநகர் பகுதியில் இருந்து கோவைக்கு எளிதாக வர முடியும். அந்த வகையில் வாடகை வித்தியாசம் பெரிய அளவில் இருக்கும். இதேபோல் கல்விக்காக செலவும் தொகை, மற்ற எக்ஸ்டரா செலவுகளும் கோவையில் குறைவாகவே இருக்கும். ஏராளமான கல்வி நிறுவனங்கள் கோவையில் இருக்கின்றன.

இன்னொரு சிறப்பு அம்சம் என்னவென்றால் கோவையை சுற்றிலும் மலைவாசல் தளங்கள், அருவிகள், சுற்றுலாதளங்கள் இருக்கின்றன. கோவையில் மால்கள், வணிக தளங்களும் ஏராளமாக இருக்கின்றன. மனஅழுத்தம் குறைந்து இனிமையாக வாழ கோவை மக்களுக்கு அங்குள்ள சுற்றுப்புறமே சிறப்பானதாக இருக்கும். கோவையில் 40 ஆயிரம் சம்பளம் வாங்குபவர் சரியான முறையில் சேமிக்க தொடங்கினால் 10 வருடத்தில் கோவையில் இடம் மற்றும் வீடு வாங்கி செட்டில் ஆகிவிட முடியும். சென்னையில் சாத்தியமே இல்லை. லட்சங்களில் சம்பளம் வாங்குபவர்களுக்கு மட்டுமே சென்னையில் சாத்தியம்.

சென்னையில் வேலை தேடி வருவோர், நிச்சயம் வேலை சேர முடியும். ஆனால் தங்கும் இடம் மற்றும் சாப்பாடு செலவுகள் தாருமாறாக இருக்கும். சென்னையில் கல்யாணம் ஆகி திருமண வாழ்க்கையில் வருவோர் அவர்கள் லட்சம் ரூபாய் சம்பாதித்தாலும், இங்குள்ள வாழ்க்கை முறை காரணமாக சேமிப்பு என்பது பெரிதாக இருக்காது.

கோவையில் 7 ஆயிரத்தில் கிடைக்கும் வீடு,இங்கு சென்னையில் 15 ஆயிரம் தர வேண்டியதிருக்கும். கோவையில் 15 ஆயிரம் வீடு வாடகை என்றால் சென்னையில 30 ஆயிரம் என்கிற அளவில் இருக்கும். கோவையை ஒப்பிடும் போது சென்னையில் கல்விக்காக செலவிடும் தொகை பெரிய அளவில் இருக்கும். சிபிஎஸ்இ பள்ளியில் குழந்தையை சேர்க்க இங்கு ஒரு லட்சமாவது எடுத்து வைக்கவேண்டும். கோவையில் 60 ஆயிரம் இருந்தாலே தரமான சிபிஎஸ்இ பள்ளியில் சேர்க்க முடியும்.

அதேநேரம் சென்னையில் லட்சங்களில் சம்பளத்தை வேகமாக தொட்டுவிட முடியும். சென்னையில் தான் பெரும்பாலான ஐடி நிறுவனங்கள் உள்ளன. எனவே

சென்னையில் எளிதாக ஐடி துறையில் அதிகபட்ச சம்பளம் பெற முடியும். ஐடி என்று இல்லை, மற்ற துறையிலும் இங்கு சம்பளம் அதிகமாக கிடைக்கும். சம்பளம் அதிகம் என்பதால் செலவும் அதிகமாகவே உள்ளது. சென்னையில் பெரும்பாலும் வெயில் தான் இருக்கும் என்பதால் வெயிலை சமாளிக்க மலைவாசல் சுற்றுலா தளங்கள் சுத்தமாக இல்லை. இதற்காக வெளியில் சென்றால் பட்ஜெட் தாங்காது. சென்னையில் சாப்பிட சென்றாலும் தாருமாறாக செலவு ஆகும். ஓட்டல், தியேட்டர், மால், பீச் இவை தான் சென்னை வாழ்க்கையின் அங்கமாக உள்ளது.

மொத்தமாக பார்த்தால் சென்னை மற்றும் கோவையை ஒப்பிட்டால் கோவையில் தான் வாழ்க்கை தரம் சிறப்பாக இருக்கும். ஆனால் சம்பளம் சென்னையில் தான் அதிகமாக இருக்கும். வேலைவாய்ப்பை பொறுத்தவரை படித்தவர்களுக்கு சென்னை சொர்க்கம். ஆனால் கோவையில் படித்தவர்கள் படிக்காதவர்கள் இருவருக்குமே சிறப்பான வாழ்க்கை இருக்கும்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe