2000 ரூபாய் நோட்டுகளை மாற்றி தருவதாக ஓய்வு பெற்ற அரசு பஸ் கண்டக்டரிடம் ரூ. 5 லட்சம் மோசடி 4 பேர் கைது

published 1 year ago

2000 ரூபாய் நோட்டுகளை மாற்றி தருவதாக ஓய்வு பெற்ற அரசு பஸ் கண்டக்டரிடம் ரூ. 5 லட்சம் மோசடி 4 பேர் கைது

 கோவை

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஜீவா நகரை சேர்ந்தவர் துரையன் (70). அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் பொள்ளாச்சி கிழக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். 

அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-
கடந்த சில நாட்களுக்கு முன்பு எனக்கு பொள்ளாச்சி சூளேஸ்வரன் பட்டியை சேர்ந்த கூலித் தொழிலாளி சித்திக்  (40), ஆனைமலை சேர்ந்த ஹபிப் ரகுமான் (44) முகமது சுஜாத் (30),  கோவை குனியமுத்துரை சேர்ந்த சதக்கத்துல்லா (44), ஆகியோர் அறிமுகமானார்கள். 

அவர்கள் ரூ. 2000 நோட்டுகளை கொடுத்தால் 500 ரூபாய் நோட்டுக்களாக மாற்றி தருவதாக ஆசைவார்த்தை கூறினார். இதனை உண்மை என நம்பிய நான் சேமித்து வைத்திருந்த ரூ. 5 லட்சம் பணத்தை அவர்களிடம் கொடுத்தேன் ஆனால் பணத்தை கொடுத்து நீண்ட நாட்கள் ஆகியும் அவர்கள் திருப்பி தராமல் என்னை ஏமாற்றி விட்டனர். 

எனவே போலீசார் உரிய நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தர வேண்டும். இவ்வாறு அந்த புகாரில் கூறியிருந்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
___________

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe