கோவையில் நேற்று எந்தப் பகுதியில் எவ்வளவு மழை பெய்தது தெரியுமா ?

published 1 year ago

கோவையில்  நேற்று எந்தப் பகுதியில் எவ்வளவு மழை பெய்தது தெரியுமா ?

கோவை: கோவையில் வெவ்வேறு பகுதிகளில் நேற்று பெய்த மழை அளவை பேரிடர் மேலாண்மை துறையினர் வெளியிட்டுள்ளனர்.

அந்த விவரம் பின்வருமாறு:

சின்கோனா பகுதிகளில் 38 மில்லி மீட்டர் மழையும், சின்னக்கல்லார் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 54 மில்லி மீட்டர் மழையும்,  வால்பாறை பரம்பிக்குளம் ஆழியார் பாசன திட்ட பகுதிகளில் 33 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

மேலும் வால்பாறை தாலுகாவில் 32 மில்லி மீட்டர் மழையும், சோலையார் சுற்றுவட்டார பகுதிகளில் 47 மில்லி மீட்டர் மழையும், ஆழியாரில் 2 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் 10 மில்லி மீட்டர் மழையும், ல் கோவை விமான நிலைய சுற்று வட்டார பகுதிகளில் 0.50 மில்லி மீட்டர் மழையும், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக சுற்றுவட்டார பகுதிகளில் 1.20 மில்லி மீட்டர் மழையும்

வாரப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் 3 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

சிறுவாணி அடிவாரத்தில் 27 மில்லி மீட்டர் மழையும்,  மதுக்கரை சுற்றுவட்டாரப் பகுதிகளில் 5 மில்லி மீட்டர் மழையும், போத்தனூர் சுற்றுவட்டார பகுதிகளில் 5 மில்லி மீட்டர் மழையும்,

மக்கினாம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் 9மில்லி மீட்டர் மழையும், கிணத்துக்கடவு சுற்று வட்டார பகுதிகளில் 5 மில்லி மீட்டர் மழையும், ஆனைமலை சுற்றுவட்டார பகுதிகளில் 15 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

கோவை மாவட்டத்தில் மொத்தமாக 286.79 மில்லிமீட்டர் மழை நேற்று பதிவாகியுள்ளது. கோவை மாவட்டத்தில் நேற்று சராசரியாக் 12.47 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe