ஆடு வளர்க்க அனுமதி தரவில்லை என்று கோரி திருநங்கை கண்ணீருடன் மனு

published 2 years ago

ஆடு வளர்க்க அனுமதி தரவில்லை என்று கோரி திருநங்கை கண்ணீருடன் மனு

கோவை: பொது இடத்தில் ஆடு வளர்க்க பஞ்சாயத்தில் அனுமதி வழங்கவில்லை என்று கூறி சூலூரை சேர்ந்த திருநங்கை ஒருவர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.

சூலூரை அடுத்த மயிலம்பட்டியை சேர்ந்த ஏஞ்சல் என்ற திருநங்கை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மனு அளித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது: மயிலம்பட்டியில் கடந்த 10 ஆண்டுகளாக வசித்து வருகிறேன்.  15 ஆடுகளை வைத்து வளர்த்து வருகிறேன்.  ஒரு பொது இடத்தில் கொட்டகை அமைத்து ஆடு வளர்த்து வந்தேன். ஆனால் பஞ்சாயத்தில் கேட்டுவிட்டுதான் ஆடு வளர்க்க வேண்டும் என்று கூறி எனது கொட்டகையை அப்புறப்படுத்திவிட்டனர்.

நான் கடன் கேட்டு நிற்கவில்லை. சொந்தத் தொழில் செய்கிறேன் அதற்கும் அனுமதி கொடுக்காமல் என்னை அழைக்கழிறார்கள். எனக்கு சொந்த தொழில் செய்ய உதவாவிட்டாலும், தொந்தரவு செய்யாமல் இருப்பதை உறுதி செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இவ்வாறு அவர் கூறினார்

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe