ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகள் இருந்தால் உஷார்! ரிசர்வ் வங்கியின் புதிய விதி

published 1 year ago

ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகள் இருந்தால் உஷார்! ரிசர்வ் வங்கியின் புதிய விதி

தற்போது பலருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகள் உள்ளன. உங்களிடம் ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகள் இருந்தால், இது உங்களுக்கு முக்கியமான செய்தி. இந்தியாவில் எத்தனை வங்கிக் கணக்குகளைத் திறக்கலாம்?

 வங்கிக் கணக்குகளைத் திறக்கும் எண்ணிக்கையில் வரம்பு இல்லை என்பதைத் தெரிந்துக்கொள்வோம். வாடிக்கையாளர் 2, 3, 4, 5 என எத்தனை வங்கிக் கணக்குகளையும் திறக்கலாம். இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வங்கிக் கணக்குகளின் எண்ணிக்கையில் எந்த வரம்பையும் நிர்ணயிக்கவில்லை.  எந்த தொந்தரவும் இல்லாமல் பல வங்கிகளில் பல சேமிப்புக் கணக்குகளை நீங்கள் நிர்வகிக்கலாம். மேலும், குறைந்தபட்ச கணக்கு இருப்பை பராமரிக்கும் தேவையை நீங்கள் பூர்த்தி செய்ய முடிந்தால், நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை.

பல வகையான வங்கிக் கணக்குகளைத் திறக்கலாம்

வங்கி சார்பில், வாடிக்கையாளர்களுக்கு பல வகையான கணக்குகள் திறக்க வசதி செய்து தரப்படுகிறது. உங்கள் வசதிக்கேற்ப சம்பளக் கணக்கு, நடப்புக் கணக்கு, சேமிப்புக் கணக்கு அல்லது கூட்டுக் கணக்கு ஆகியவற்றைத் தொடங்கலாம். பெரும்பாலான வாடிக்கையாளர்கள் சேமிப்புக் கணக்கைத் திறக்கின்றனர். இந்தக் கணக்கில் வட்டியின் பலனையும் பெறுவீர்கள். இது ஒரு அடிப்படை வங்கிக் கணக்கு. மேலும் நமது தேவைக்கு ஏற்ப சரியான கணக்கை தொடங்கி வைத்துகொள்வதன் மூலம் அதனால் கிடைக்கும் முழு பலனையும் நம்மால் அனுபவிக்க முடியும்.

மேலும், அரசு மற்றும் அரசு அல்லாத தனியார் வங்கி என அனைத்திலும் நம்மால் கணக்கை தொடங்க முடியும், ஆனால் அனைத்து வங்கிகளும் ஒரே மாதிரியான வட்டி, குறந்தபட்ச இருப்பு தொகையை நிர்ணயிப்பது இல்லை என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். ஒவ்வொரு வங்கியும் அதற்கென தனி தனி விதிமுறைகளை பின்பற்றி இயங்குகிறது, அதனால் நாம் எந்த வங்கியில் எந்த தன்மை கொண்ட கணக்கை தொடங்குகிறோம் அதற்கான வட்டி, குறந்தபட்ச இருப்பு தொகையை என அனைத்து விதிமுறைகளை அறிந்து வைத்துக்கொள்வதும் அவசியம் ஆகும்.

மேலும், வங்கி சேவையை வாடிக்கையாளர்களுக்கு உகந்ததாக மாற்ற மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிறுந்தார். வங்கி முறையை எளிமையாக்க வேண்டும் என்றார், வங்கி வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப வங்கி முறையை எளிமையாக்குவது குறித்து நிதியமைச்சர் பேசினார். இத்தகைய மாற்றங்களுக்குப் பிறகு, அதிகமான வாடிக்கையாளர்கள் வங்கிகளுடன் இணைக்க முடியும். அது மட்டும் இன்றி வாடிக்கையாளர்களின் வசதிகளில் வங்கிகள் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறியிருந்தார். இது கடன் வாங்கும் செயல்முறையை எளிதாக்கும். கடன் வழங்குவதற்கான தரநிலைகள் சரியாக இருக்க வேண்டும் என்றும் இதனால் சாமனிய மக்களும் பெரிதளவில் பயன் அடைவர் என்று நிதி அமைச்சர் வங்கிகளிடம் கூறினார்.

 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe