ஆலம் விழுதுகள் சார்பில் மாற்றுத்திறனாளி மாணவிக்கு வீல் சேர்

published 1 year ago

ஆலம் விழுதுகள் சார்பில் மாற்றுத்திறனாளி மாணவிக்கு வீல் சேர்

கோவை : கோவை அரசு கலைக் கல்லூரியில் Bcom CA இரண்டாம் ஆண்டு பயின்று வருபவர் பெனஸ்யா. இவரால் பிறவியில் இருந்தே நடக்க முடியாது. அவரது பெற்றவர்கள் தூக்கிக்கொண்டு சென்று தான் பள்ளிகளில் படிக்க வைத்துள்ளனர். 

இவர் தற்போது கோவை அரசு கலைக்கல்லூரியில் இரண்டாம் ஆண்டு Bcom CA பயின்று வருகிறார். இவரது தந்தைக்கு சில தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட விபத்தினால் கையில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. நிலையில் பெனஸ்யாவை அவரது தாயார் தினமும் தூக்கி கொண்டு வந்து தான் கல்லூரிக்கு அழைத்து வந்து அழைத்து செல்கிறார்.

இந்நிலையில் இதனை அறிந்த ஆழம் விழுதுகள் அமைப்பின் ஃபவுண்டர் மீனா ஜெயக்குமார் அவர்களை நேரில் அழைத்து மாணவி பெனஸ்யாவிற்கு இலவசமாக வீல் சேர் வழங்கினார். மேலும் மாணவியின் தாயருக்கு பொன்னாடை அணிவித்து அவரது தாய்மை செயலுக்கு மரியாதை செலுத்தினார். மேலும் அவரது தந்தையையிடமும் நலம் விசாரித்தார். 

இந்நிகழ்வில் மாணவியுடன் பேசிய   மீனா ஜெயக்குமார், நன்கு படித்து தாய் தந்தையை பார்த்துக் கொள்ள வேண்டுமென கூறி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். மேலும் எந்த உதவியும் தேவைப்பட்டாலும் தங்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.மீனா ஜெயக்குமாருக்கு மாணவி பெனஸ்யா மற்றும் அவரது பெற்றோர்கள் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe