தீபாவளிக்கு ஊருக்கு போக ரயில் டிக்கெட் போட்டாச்சு!!! ரயில் முன்பதிவு டிக்கெட்டுகள் 10 நிமிடத்தில் விற்று தீர்ந்தது….

published 1 year ago

தீபாவளிக்கு ஊருக்கு போக ரயில் டிக்கெட் போட்டாச்சு!!! ரயில் முன்பதிவு டிக்கெட்டுகள் 10 நிமிடத்தில் விற்று தீர்ந்தது….

தமிழகத்தில் ஆண்டுதோறும் நவம்பர் மாதங்களில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தீபாவளி பண்டிகை என்பது மக்களின் முக்கிய பண்டிகையாகவும் குடும்பத்துடன் ஒன்றாக சேர்ந்து கொண்டாடும் படியாகவும் பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில், இந்த ஆண்டுக்கான தீபாவளி பண்டிகை நவம்பர் 12ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. ரயில்களை பொறுத்தவரை கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில் 120 நாட்களுக்கு முன்பாக டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது ரயில்வே நிர்வாகம்.

அதன்படி, ஜூலை 12 (இன்று) தீபாவளி பண்டிகைக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியது. இன்று காலை 8 மணிக்கு ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கப்பட்ட நிலையில், சுமார் 10 நிமிடத்திலேயே அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்தது விட்டனர்.

மேலும், விரைவு இரயில்களான கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், அனந்தபுரி எக்ஸ்பிரஸ், நெல்லை எக்ஸ்பிரஸ்,பொதிகை எக்ஸ்பிரஸ்,பாண்டியன் எக்ஸ்பிரஸ் ஆகிய விரைவு ரயில்களில் இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி டிக்கெட்டுக்கான விற்பனையும் தொடங்கிய 10 நிமிடத்திற்குள்ளாகவே விற்று தீர்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe