ராஜஸ்தானில் பள்ளி பேருந்து கவிழ்ந்து ஒருவர் உயிரிழந்தார் - 30 மாணவர்கள் படுகாயம்

published 1 year ago

ராஜஸ்தானில் பள்ளி பேருந்து கவிழ்ந்து ஒருவர் உயிரிழந்தார் - 30 மாணவர்கள் படுகாயம்

இந்தியா : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மர் மாவட்டத்தில் இன்று பள்ளி பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஒருவர் உயிரிழந்தார் மற்றும் சுமார் 30 பள்ளி மாணவர்கள் காயமடைந்துள்ளனர். 

பேருந்து மாணவர்களை அவர்களது பள்ளிக்கு ஏற்றிச் சென்று கொண்டிருந்தபோது, பொக்ரான் நகர் அருகே ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து வாகனம் கவிழ்ந்ததாக சங்கரா காவல் நிலையத்தின் (ஜெய்சால்மர்) உதவி சப் இன்ஸ்பெக்டர் கைலாஷ் சந்த் கூறினார். காயமடைந்த மாணவர்களில் பலர் ஜெய்ப்பூரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். சிலர் உள்ளூர் மருத்துவ மையங்களில் அனுமதிக்கப்பட்டனர்.

வேறு சில குழந்தைகளின் பெற்றோர் அவர்களை தனியார் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்றதாக போலீஸ் அதிகாரி கூறினார். இந்த விபத்தில் பேருந்து ஓட்டுனரும் காயமடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். 

விபத்து குறித்து, ஜோத்பூர் ஆட்சியர் ஹிமான்ஷு குப்தா கூறுகையில், "ஜெய்சால்மரில் இருந்து 11 பள்ளிக் குழந்தைகள் சிகிச்சைக்காக ஜோத்பூருக்குக் கொண்டு வரப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் ஆபத்தான கட்டத்தை தாண்டிவிட்டனர். ஆனால் விக்ரம் சிங் என அடையாளம் காணப்பட்ட ஊழியர் ஒருவர் காயம் அடைந்து உயிரிழந்தார்" என்றார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe