காரமடையில் போலீஸ்காரரின் மோட்டார்சைக்கிளை திருடிய 4 பேர் கைது

published 2 years ago

காரமடையில் போலீஸ்காரரின் மோட்டார்சைக்கிளை திருடிய 4 பேர் கைது

கோவை, ஜூன்.6- கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகை போலீஸ்நிலையத்தில் இரண்டாம் நிலை காவலராக பணியாற்றி வருபவர் சந்திரசேகர். மோட்டார்சைக்கிள் திருட்டு இவர் கடந்த 2 நாட்களுக்கு  முன் பணி முடிந்து தனது  மோட்டார்சைக்கிளில்  காரமடை தொட்டிபாளையத்தில் உள்ள தனது வீட்டுக்கு சென்றார். வீட்டு முன்பு மோட்டார்சைக்கிளை நிறுத்தி விட்டு தூங்கச் சென்றார். காலையில் எழுந்து பார்த்த போது மோட்டா   சைக்கிள் காணாமல் போய் இருந்தது. இதுகுறித்து சந்திரசேகர் காரமடை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். 

அதேநாளில் காரமடை கண்ணார்பாளையம் பாலாஜிநகரைச் சேர்ந்த தனபால் என்பவரது மோட்டார்சைக்கிளும் திருட்டு போனது. இதுகுறித்தும் போலீசில் புகார் செய்யப்பட்டது. 4 பேர் கைது இதையடுத்து மேட்டுப்பாளையம் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலமுருகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு மோட்டார்சைக்கிள் திருடர்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.  திருட்டு நடந்த பகுதியில் இருந்த சி.சி.டி.வி. காமிரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். 

அப்போது மோட்டார்சைக்கிளை திருடிச் செல்லும் காட்சிகள் அதில் பதிவாகி இருந்தன. அதன் அடிப்படையில் போலீசார் விசாரித்து மோட்டார்சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட 4 பேரை கைது செய்தனர். விசாரணையில் அவர்கள்  மேட்டுப்பாளையத்தை சேர்ந்த  நிசார் முஹம்மது, ஹரிகரன், தமிழ்ச்செல்வன் மற்றும் காரமடை பகுதியை சேர்ந்த நித்திஷ்  ஆகியோர் என்பது தெரியவந்தது. கைதான 4 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர்

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe