Breaking news: கோவையில் பரபரப்பு : விமானத்தில் இயந்திர கோளாறு. 160 பயணிகள் உயர் தப்பினர்..!

published 1 year ago

Breaking news: கோவையில் பரபரப்பு : விமானத்தில் இயந்திர கோளாறு. 160 பயணிகள் உயர் தப்பினர்..!

கோவை: கோவையில் விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டது. இதனால் விமானம் அவசர கதியில் தரையிறக்கப்பட்டது.

கோவை விமான நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, ஐதராபாத், டெல்லி, மும்பை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கும், ஷார்ஜா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. தினமும் சுமார் 23 விமானங்கள் இயக்கப்படுகின்றன.

ஷார்ஜாவிற்கு வாரத்தில் 5 நாட்களும், சிங்கப்பூருக்கு தினமும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.

கோவையில் இருந்து ஷார்ஜாவுக்கு இன்று காலை 4 மணிக்கு விமானம் புறப்பட்டது. இந்த விமானத்தில் 160க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனர். விமானம் வானத்தில் பறக்க தொடங்கிய சில நிமிடத்திலேயே விமானத்தின் இயந்திர கோளாறு ஏற்பட்டது.

இதையறிந்த விமானி உடனடியாக விமான நிலையத்திற்கு தகவல் கொடுத்து விமானத்தை அவசர அவசரமாக கோவை விமான நிலையத்தில் தரையிறக்கினார். இதையடுத்து அங்கிருந்த பொறியாளர்கள் உடனடியாக சென்று ஆய்வு செய்து வருகின்றனர்.

ஓடுபாதையில் நிறுத்தி வைக்கப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இயந்திர கோளாறு ஏற்பட்ட உடன் உடனடியாக விமானம் தரையிறக்கப்பட்டதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe