கோவையில் அக்ரி இன்டெக்ஸ் 2023 கண்காட்சி: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி பேட்டி!!!

published 1 year ago

கோவையில் அக்ரி இன்டெக்ஸ் 2023 கண்காட்சி:  தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி பேட்டி!!!

கோவை:

கோவையில் 21வது பதிப்பாக, ஜூலை 14ம்தேதி முதல், 17ம் தேதிவரை, அக்ரி இன்டெக்ஸ் 2023 கண்காட்சி நடைபெற உள்ளது, அண்ணா சிலை பகுதியில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி பேட்டி.

கோவை அண்ணா சிலை பகுதியில் உள்ள, கொடிசியா வளாகத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய,   தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் வெ.கீதாலட்சுமி, கூறுகையில்…

கடந்த 2000 ஆண்டு முதல், கொடிசியா அக்ரி இன்டெக்ஸ் எனும் வேளாண் கண்காட்சி ஆண்டு தோறும் நடத்தப் பட்டு வருகின்றது, இது வரை 20 பதிப்புகள் நடைபெற்று முடிந்த நிலையில் 21வது பதிப்பாக இந்த ஆண்டு, ஜூலை 14 முதல், 17ம்தேதி வரை கொடிசியா அரங்கில் நடைபெற உள்ளது. இந்த கண்காட்சியில், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு, குறிப்பாக பொறியியல் மற்றும் உற்பத்தி சார்ந்த தொழிற்சாலைகளுக்கு, தேவையான அனைத்தும், புதுமை கண்டுபிடிப்புகள் இங்கு காட்சிப்படுத்தப்பட உள்ளது. 

விவசாயிகளுக்கு நவீனத் தொழில்நுட்பத்தை நேரடியாக அறிமுகம் செய்யும் ஒரு களமாக இந்த கண்காட்சி அமையும் இதில் அனைத்து விவசாயிகளும் கலந்து கொண்டு பயனடைய வேண்டும் என்றார். இந்த செய்தியாளர் சந்திப்பின் பொழுது, கொடிசியா தலைவர் திருஞானம், கொடிசியா செயலாளர் சசி குமார், அக்ரி இன்டெக்ஸ் 2023 தலைவர் தினேஷ்குமார், துணைத் தலைவர் ஸ்ரீஹரி, மற்றும் பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe