வேலையில் மனஅழுத்தமா??? மீள வேண்டுமா??? வாங்க போகலாம் டூரிஸ்ட் ஸ்பாட் !!!!

published 1 year ago

வேலையில்  மனஅழுத்தமா???  மீள வேண்டுமா??? வாங்க போகலாம் டூரிஸ்ட் ஸ்பாட் !!!!

தமிழகம் : தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் வேலை, ஸ்ட்ரஸ் என ஓடி கொண்டிருக்கின்றனர். இதனால், பலரும் டிப்ரெஸன் வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். இதில் இருந்து மீள வேண்டும் என்பதே அனைவரின் ஆசையாகும். இதற்காக டூரிஸ்ட் ஸ்பாட்களை தேடி ஓடுவர். பொதுவாக அனைவருக்கும் பிரபலமான டூரிஸ்ட் ஸ்பாட்களே தெரியும். அப்படி தெரியாத, அட்டகாசமான இடங்களை இதில் பார்க்கலாம்.

தென்மேற்கு பருவக்காற்று அடிக்க ஆரம்பித்துவிட்டது. ஆனால் தமிழகம் மேற்கு தொடர்ச்சி மலையின் வலதுபுறம் இருப்பதால் கேரளவோடு குறைந்துவிட்டது. மழையின் சாரல் மட்டும் தமிழ்நாடோடு வீசிக்கொண்டு இருக்கிறது. இந்த நேரத்தில் தமிழ்நாட்டில் உள்ள மலைப்பிரதேசங்களில் கேம்பிங் செய்வது சிறப்பாக இருக்கும். அதற்கான ஸ்பாட்களை சொல்கிறோம்.

மேகமலை: மேற்குத் தொடர்ச்சி மலையின் பசுமையான காடுகளுக்கு நடுவே அமைந்துள்ள மேகமலை பல ரகசிய ஸ்பாட்களை மறைத்து வைத்துள்ளது. இயற்கையுடன் கொஞ்சம் நேரத்தை அனுபவிக்க விரும்பினால் மேகமலை சரியாக இருக்கும். மலை ஏறி மேலே போனால், அணைகள், மூடுபனிகள் மற்றும் அழகிய நீரோடைகள் போன்ற கவர்ச்சிகரமான காட்சிகளை பார்க்கலாம்.

ஏற்காடு: மேற்குத் தொடர்ச்சி மலையின் பசுமைப் பரப்பில் மறைந்துள்ள ஏற்காடு, இயற்கை அழகுடன், அமைதியைத் தேடும் மக்களுக்கு ஏற்ற இடமாக விளங்குகிறது. ஏற்காட்டில் உள்ள அழகிய இடங்களில் ஏதேனும் ஒரு இடத்தில் கூடாரங்களை அமைத்து அதன் அழகை ரசிக்கலாம். ஏற்காடு ஏரி மற்றும் கிள்ளியூர் நீர்வீழ்ச்சி போன்ற இடங்கள் கேம்பிங்கு ஏற்றதாக இருக்கும்

கொடைக்கானல்: இந்தியாவிலேயே மிகவும் பிரபலமான மலைவாசஸ்தலங்களில் ஒன்றான கொடைக்கானல் அழகிய ஏரிகள், பனிமூடிய மலைகள் மற்றும் பள்ளத்தாக்கின் காட்சிகாலை வழங்கக்கூடியவை. கொடைக்கானல் மலைப்பகுதிகளில் பல அமைதியான முகாம் இடங்கள் உள்ளன. கேம்பிங் மட்டும் இல்லாமல் கிளம்பிங் இடங்களும் உள்ளன.

குன்னூர்: கடல் மட்டத்திலிருந்து 6000 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த அழகிய மலைவாசஸ்தலம், பசுமையான தேயிலைத் தோட்டங்கள், ஆழமான பள்ளத்தாக்குகள், நீர்வீழ்ச்சிகளுக்கு பெயர் பெற்றது. சிம்ஸ் பூங்கா, லாம்ப்ஸ் ராக், செயின்ட் கேத்தரின் நீர்வீழ்ச்சி, டால்ஃபின்ஸ் நோஸ் மற்றும் லாஸ் ஃபால்ஸ் ஆகியவை கட்டாயம் பார்க்க வேண்டியவை. இந்த இடத்தில் முகாமிட்டு இரவு தங்கி பாருங்கள், உங்களின் ட்ரிப் மறக்க முடியாததாக இருக்கும்.

வால்பாறை: அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியிலிருந்து மேலும் 60 கிலோமீட்டர் பயணித்தால், 3500 அடி உயரத்தில் அமைந்துள்ள தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் உள்ள அழகிய மலைவாசஸ்தலமான வால்பாறை தேயிலை, காபி, சின்கோனா மற்றும் ஏலக்காய் தோட்டங்கள் உள்ளன. வால்பாறையில் இரவு முகாமிட்டு இயற்கையின் அழகை கண்டு களித்திடுங்கள்

 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe