டாஸ்மாக் கடையில் காலி பாட்டில்கள் திரும்ப பெறுவதில் முறைகேடு ; பாட்டில் வியாபாரிகள் நல சங்கத்தினர் மனு.

published 1 year ago

டாஸ்மாக் கடையில் காலி பாட்டில்கள் திரும்ப பெறுவதில் முறைகேடு ; பாட்டில் வியாபாரிகள் நல சங்கத்தினர் மனு.

கோவை: பாட்டில் வியாபாரிகள் நல சங்க கோவை மண்டல தலைவர் ராகவன், செயலாளர் செல்வராஜ், பொருளாளர் செந்தில் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் கலெக்டர் காந்தி குமார் பாடியிடம் இன்று மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

கோவை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் கோவை மண்டலத்தை சேர்ந்த தொழில் அனுபவம் வாய்ந்த நிறுவனங்கள்  பாட்டில்களை திரும்ப பெறுவதற்கு அதிகப்படியான விலை கொடுத்தும், அந்த நிறுவனங்களுக்கு டெண்டர் கொடுக்கப்படவில்லை. அதற்கு பதிலாக விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த சுபா டிரேடர்ஸ்க்கு டெண்டர் கொடுக்கப்பட்டுள்ளது. 

டாஸ்மாக் கடைகளில் திரும்ப வராத காலி பாட்டில்களை திரும்ப வந்ததாக கூறி முறைகேடுகள் நடைபெறுகிறது இதனால் டாஸ்மாக் நிறுவனத்திற்கு நிதி இழப்பு ஏற்படுகிறது டாஸ்மாக் பாட்டில்களை சுத்தம் செய்யும் தொழிலில் ஈடுபடும் lவியாபாரிகளுக்கு கொடுக்காமல் கண்ணாடி உடைவு கம்பெனிக்கு வழங்குவதால் பாட்டில் சுத்தம் செய்யும் தொழிலில் ஈடுபடும் வியாபாரிகளுக்கும், மற்றும் கிராமப்புற பெண்களுக்கும் வேலைவாய்ப்பு பறிபோகிறது. இதனால் பாட்டில் சுத்தம் செய்யும் தொழிலாளர்கள், பாட்டில் வியாபாரிகள் என சுமார் 10,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe