சென்னை ஐஐடியில் வேலை ! டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..

published 1 year ago

சென்னை ஐஐடியில் வேலை ! டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..

சென்னை: சென்னை ஐஐடியில் காலியாக உள்ள ஜூனியர் டெக்னிஷியன் பதவிக்கு ஆட்சேர்ப்பு தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. டிப்ளமோ படித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். தேர்வு அறிவிப்பு குறித்த விவரங்களை விரிவாக பார்க்கலாம்.

இந்தியாவில் முன்னணி கல்வி நிறுவனங்களில் ஒன்றாக ஐஐடி செயல்பட்டு வருகிறது. நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ஐஐடி கல்வி நிறுவனங்கள் உள்ளன. அந்த வகையில் சென்னையிலும் ஐஐடி உள்ளது. ஐஐடியில் அவ்வப்போது காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு வெளியாகும்.

கல்வி பணி மட்டும் இன்றி நிர்வாகம் உள்ளிட்ட இதர பிரிவுகளிலும் காலிப்பணியிடங்களை நிரப்புவது பற்றிய அறிவிப்பை ஐஐடி மெட்ராஸ் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது ஜூனியர் டெக்னிஷியன் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 4 பேர் தேர்வு செய்யப்படுகின்றனர்.

கல்வி தகுதி என்ன?: டிப்ளமோ எலக்ட்ரானிக்ஸ் என்ஜினியரிங் அல்லது டிப்ளமோ எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் என்ஜினியரிங் அல்லது டிப்ளமோ எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ட்ருமெண்டேஷன் என்ஜினியரிங் (DEIE) ஆகிய பிரிவுகளில் ஏதேனும் ஒன்றை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஒரு வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: பொது பிரிவினர் வயது வரம்பு 23 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். இதர பிரிவினருக்கு 25 க்கு மிகாமல் இருக்க வேண்டும். சம்பளம் எவ்வளவு?: இது முற்றிலும் ஒப்பந்த அடிப்படையிலான பணியாகும். தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு ரூ.16 ஆயிரம் முதல் ரூ. 23 ஆயிரம் வரை சம்பளம் கிடைக்கும். 

விண்ணப்பிப்பது எப்படி?: தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் வரும் 31.07.2023 க்க்குள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். https://icandsr.iitm.ac.in/recruitment/ இந்த இணையதளத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். தகுதியான தேர்வர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேரமுகத்தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

 



 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe