இன்று தமிழ்நாடு தினம்..! வரலாற்று பதிவு..!

published 1 year ago

இன்று தமிழ்நாடு தினம்..! வரலாற்று பதிவு..!

சென்னை:

 தமிழர்களின் தாய்நிலமான தமிழ்நாடு, சென்னை மாகாணம் என அழைக்கப்பட்டு வந்தது. சென்னை மாகாணம் என்ற பெயரை மாற்றி தமிழர்கள் தாய்மண்ணுக்கு தமிழ்நாடு என பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய நாள் இன்று ஜூலை 18. இந்த நாள் தமிழ்நாடு நாளாக தமிழ்நாடு அரசால் எழுச்சியுடன் கொண்டாடப்பட்டது.

சென்னை மாகாணம்

நாடு விடுதலை அடைவதற்கு முன்னரும் விடுதலை அடைந்த பின்னரும் சென்னை மாகாணம், மெட்ராஸ் மாகாணம், மதராஸ் மாகாணம் என்பதுதான் நமது மாநிலத்துக்கு பெயர். மொழிவாரி மாநிலங்களாக நாட்டின் பல மாகாணங்கள் பிரிக்கப்பட்ட போதும் தமிழ்நாட்டுக்கு பழைய பெயர்கள்தான் தொடர்ந்தன. மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்ட நவம்பர் 1-ந் தேதியை கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் மாநில உருவாக்க நாளாக கொண்டாடுகின்றன. ஆனால் நவம்பர் 1-ந் தேதி தமிழர்கள் கொண்டாட முடியாத அளவுக்கு சென்னை மாகாணத்தில் தமிழ் மக்கள் பெரும்பான்மையினராக இருந்த பல பகுதிகள் புதிய மாநிலங்களுடன் இணைந்தன. இருந்த போதும் பிற மாநிலங்களைப் போல நவம்பர் 1-ந் தேதியை தமிழ்நாடு நாளாக கொண்டாட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டு வந்தது.

தமிழ்நாடு பெயர் சூட்ட கோரி போராட்டங்கள்: 

1956-ம் ஆண்டு சென்னை மாகாணத்துக்கு தமிழ்நாடு எனப் பெயர் சூட்ட கோரி தியாகி சங்கரலிங்கனார் 73 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி மரணத்தை தழுவினார். பின்னர் 1960, 1961-ல் சென்னை மாகாணத்துக்கு தமிழ்நாடு எனப் பெயர் சூட்டக் கோரி பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன 1962-ல் ராஜ்யசபாவில் பூபேஷ் குப்தா எம்.பி, சென்னை மாகாணத்துக்கு தமிழ்நாடு என மாற்றம் செய்ய மசோதா தாக்கல் செய்தார்.ஆனால் அந்த மசோதா தோற்கடிக்கப்பட்டது. 1964-ம் ஆண்டு சென்னை மாகாண சட்டசபையில் திமுகவின் ராம. அரங்கண்ணல் எம்.எல்.ஏ. தமிழ்நாடு பெயர் சூட்டும் தீர்மானம் கொண்டுவந்தார். இத்தீர்மானமும் நிராகரிக்கப்பட்டது.


தமிழ்நாடு பெயர் மாற்றம்:

இதனையடுத்து 1967-ம் ஆண்டு சரித்திரம்
பிறந்தது. தமிழ்நாட்டில் முதல் முறையாக பேரறிஞர் அண்ணா தலைமையில் திமுக ஆட்சி அமைந்தது. பேரறிஞர் அண்ணா குறுகிய காலமே ஆட்சி செய்தவர். ஆனால் திமுக ஆட்சி அமைந்ததும் முதல்வர் பேரறிஞர் அண்ணா ஜூலை 18-ந் தேதி சென்னை மாகாணத்தின் பெயரை தமிழ்நாடு என மாற்றினார். அன்று முதல் சென்னை மாகாணம், மதராஸ் மாகாணம், மெட்ராஸ் மாகாணம் என்பது தமிழ்நாடு என மாறியது.

ஜூலை 18 தமிழ்நாடு நாள்: 

தமிழ்நாடு என பெயர் சூட்டப்பட்ட நாளான ஜூலை 18- ந் தேதி தமிழ்நாடு நாள் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதன்படி தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் தமிழ்நாடு நாள் கொண்டாட்டங்கள் களைகட்டி இருக்கின்றன. தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் தமிழ்நாடு நாள் எழுச்சியுடன் கொண்டாடப்படுகிறது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe