தந்தை பெரியார் விருதுக்கு பரிந்துரை கேட்கும் கோவை மாவட்ட நிர்வாகம்

published 1 year ago

தந்தை பெரியார் விருதுக்கு பரிந்துரை கேட்கும் கோவை மாவட்ட நிர்வாகம்

கோவை : தந்தை பெரியார் விருதுக்கு பரிந்துரைகள் வரவேற்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பு செய்வதற்காக சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது 1995ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருது பெறுவோருக்கு ஐந்து லட்சம் விருது தொகையும், ஒரு சவரன் தங்கப் பதக்கமும், தகுதியுரையும் வழங்கப்படுகிறது.

இவ்விருதாளர் முதலமைச்சரால் தேர்வு செய்யப்படுகிறார். 2023-ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது வழங்குவதற்கு உரிய விருதாளரை தேர்ந்தெடுக்க
பரிந்துரைகள் வரவேற்கபடுகிறது.

எனவே, சமூக நீதிக்காக பாடுபட்டு பொதுமக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்திட மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் அதன் பொருட்டு எய்திய சாதனைகள் ஆகிய தகுதிகள்
உடையவர்கள் தங்களது விவரங்களுடன் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு
விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் தங்களது விண்ணப்பம், தங்களின் சுயவிவரம், முழு முகவரி, தொலைபேசி எண் மற்றும் சமூகநீதிக்காக பாடுபட்ட பணிகள் குறித்த விவரம் மற்றும் ஆவணங்கள் உள்ளடக்கியதாக இருத்தல் வேண்டும் எனவும் ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் விண்ணப்பங்கள் மாவட்ட ஆட்சியரிடம் வந்து சேர வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe