மகளிர் உரிமைத் தொகை வழங்குவதில் அரசியல் தலையீடு இருக்காது..! - கோவை மாவட்ட ஆட்சியர்

published 1 year ago

மகளிர் உரிமைத் தொகை வழங்குவதில் அரசியல்  தலையீடு இருக்காது..! - கோவை  மாவட்ட ஆட்சியர்

கோவை: மகளிர் உரிமைத் தொகை வழங்குவதில் அரசில் தலையீடு இருக்காது என்றும் வெளிப்படைத் தன்மையுடன் விண்ணப்பங்கள் வாங்கப்படும் என்றும் கோவை  மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் பாடி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது

மகளிர் உரிமை தொகை விண்ணப்பம் பெற சிறப்பு முகாம் 2கட்டங்களாக நடத்தப்பட உள்ளது. மாவட்டத்தில் 11 லட்சத்து 43 ஆயிரத்து 824 குடும்ப அட்டைகள் பயன்பாட்டில் இருக்கின்றது.

ஜூலை 24 ந் தேதி முதல் ஆகஸ்ட்  4 ந் தேதி வரை முதல்கட்டமாக முகாம் நடத்தப்படுகின்றது. 500 குடும்ப அட்டைகளுக்கு ஒரு தன்னார்வளர் என நியமிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றது. 

நாளை முதல் குடும்ப அட்டைதாரர் எப்போது வரவேண்டும் என்ற டோக்கன்  வழங்கப்படும் .முதல் 2 நாட்கள் காலை 30 பேர், பிற்பகல் 30 பேர் என விண்ணப்பம் மொபைல் அப்ளிகேசன் மூலம் வழங்கப்படுகின்றது.

அதன் பின்னர் காலையில் 40 பேர் மாலையில் 40 பேர் என விண்ணப்பங்கள் பெறப்படும். கடைகளுக்கு வர பொதுமக்கள் அவசர பட வேண்டாம். எப்போதும் வர வேண்டும் என்பதை ரேசன் கடை ஊழியர்கள்  சொல்லுவார்கள். என்னென்ன கொண்டு வர வேண்டும் என்பதையும் சொல்லுவார்கள். முகாமுக்கு ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம், மின்சார பில் போன்றவை கொண்டு வர வேண்டும்.

ஆதார் அட்டையுடன் இணைக்கபட்ட செல்போன் எண் கொண்டு வந்தால், 5 நிமிடத்தில் வேலை முடிந்து விடும். பொதுமக்களுக்கு தேதி,நேரம் கொடுக்கப்படும். அந்த தேதியில் வர முடியவில்லை எனில் அதற்கு மாற்று தேதிகள் வழங்கப்படும்.

பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் வனத்துறை உதவியுடன் உரிமை தொகைக்கான விண்ணப்பம் பெறப்படும்.
குடும்ப அட்டை ,ஆதார் இல்லை எனில் அதற்கு  தனியாக பதிவு செய்யப்பட்டு  இல்லாத ஆவணங்களை பெற நடவடிக்கை எடுக்கப்படும்
இரு கட்டமாக சிறப்பு முகாம்  நடத்தப்படுவது கூட்டத்தை கட்டுப்படுத்ததான். விண்ணப்பம் வழங்குவதும் பெறுவதும் வெளிப்படைத் தன்மையுடன் நடைபெறும். அரசியல் தலையீடு இருக்காது.

இவ்வாறு அவர் கூறினார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe