சத்தி ரோட்டில் லாரி முன்பு விழுந்து வாலிபர் தற்கொலை.. யார் என போலீசார் விசாரணை..!

published 1 year ago

சத்தி ரோட்டில் லாரி முன்பு விழுந்து வாலிபர் தற்கொலை.. யார் என போலீசார் விசாரணை..!

கோவை: கோவை சத்தி ரோட்டில் லாரி முன்பு விழுந்து வாலிபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். அவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை சரவணம்பட்டி சத்தி ரோட்டில் நேற்று வாலிபர் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அங்குள்ள தனியார் வணிக வளாகம் அருகே சென்ற போது அவர் திடீரென சாலையின் நடுவே சென்று அந்த வழியாக வந்த லாரி முன்பு விழுந்தார்.

இதில் லாரியின் முன்பக்க டயர் ஏறி இறங்கியதில் அவர் தலைநசுங்கி பலியானார். தகவல் அறிந்து வந்த போலீசார் அவரின் சடலத்தை கைப்பற்றி கோவை இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவத்தை நேரில் பார்த்த சிலரிடம் விசாரித்தபோது, சுமார் 45 வயது மதிக்கத்தக்க வாலிபர் லாரி முன்பு விழுந்து தற்கொலை செய்து கொண்டதாகவும், லாரி நிற்காமல் சென்றுவிட்டதாகவும் தெரிவித்துள்ளனர். அவர் யார்? எந்த ஊர் என்பன போன்ற விவரம் கிடைக்கவில்லை.

இது குறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe