கோவையில் ஆக்கிரமிப்பை அகற்ற வந்த அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதம்

published 1 year ago

கோவையில் ஆக்கிரமிப்பை அகற்ற வந்த அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதம்

கோவை: கவுண்டம்பாளையத்தில் ஆக்கிரமிப்பு பகுதிகள் அகற்ற வந்த அதிகாரிகளிடம் கடை உரிமையாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கோவை கவுண்டம்பாளையத்தில் இருந்து இடையார்பாளையம் செல்லும் சாலையில் இருபுறமும் கடைகள் உள்ளன. அந்தந்த கடைகளுக்கு வருபவர்கள் சாலையிலேயே தங்களது டூவிலர், கார் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்துவிட்டு செல்வதாலும், சில கடைகள் அத்துமீறி ஆக்கிரமிப்பு செய்து இருப்பதாலும் சாலைகள் அகலம் குறைந்து அந்த வழியாக செல்லும் வாகனங்களுக்கு நெருக்கடிகள் ஏற்படுகின்றன.

இதனால் காலை மற்றும் மாலை வேலைகளில் வாகன நெரிசல்களால் பொதுமக்களும் பாதிக்கப்படுகின்றனர். இந்த நிலையில் மாநில நெடுஞ்சாலைத்துறையினர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை விரிவாக்கம் செய்ய முடிவு செய்தனர்.

இதற்காக கவுண்டம்பாளையம் ஜங்சனில் இருந்து டி.வி.எஸ் நகர் திரும்பும் பாலம் வரை ஆக்கிரமிப்பு ஏற்படுத்தியுள்ள கடைகளுக்கு சில நாட்களுக்கு முன்பு நோட்டீஸ் விநியோகம் செய்துள்ளனர். அதில் ஆக்கிரமிப்புகளை அகற்றி தரும்படியும் சாலை விரிவாகத்திற்கு ஓத்துழைக்கும்படியும் கேட்டுள்ளனர். ஆனால் யாரும் அகற்றியதாக தெரியவில்லை.

இந்த நிலையில் இன்று மாநில நெடுஞ்சாலைத்துறை ஏ.டி சோழவந்தான் மற்றும் மாநகராட்சி உதவி பொறியாளர் எழில் ஆகியோர் தலைமையில் வந்த அதிகாரிகள் பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கிருந்த சில கடைகாரர்கள் இருபுறமும் அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டும், ஒருதலைபட்சமாக செயல்படகூடாது என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் ஒரு வார காலம் அவகாசம் கேட்டு மனு கொடுத்தனர். இந்த நிலையில் 2 நாட்கள் அவகாசம் தருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனையடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களும், அதிகாரிகளும் கலைந்து சென்றனர். இதற்காக கவுண்டம்பாளையம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe