மருத்துவமனை நிர்வாகத்திடமே புகார் அளிக்க வழிவகை செய்யப்படும் - நோயாளி ஒருவர் உயிரிழந்த நிலையில் கோவை அரசு மருத்துவமனை டீன் விளக்கம்..!

published 1 year ago

மருத்துவமனை நிர்வாகத்திடமே புகார் அளிக்க வழிவகை செய்யப்படும் -  நோயாளி ஒருவர் உயிரிழந்த நிலையில் கோவை அரசு மருத்துவமனை டீன் விளக்கம்..!

கோவை: தாராபுரம் பகுதியை சேர்ந்த நாகராஜ்- காளியம்மாள் தம்பதியினரின் மகன் ராஜேஷ் குமார்(38), கோவை அரசு மருத்துவமனையில் கடந்த புதன்கிழமையன்று டயாலிசிஸ் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று அவர் உயிரிழந்தார்.

இந்நிலையில் அவரது உயிரிழப்புக்கு அரசு மருத்துவமனையே காரணமே என அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். அரசு மருத்துவமனையில் மருந்துகளை வெளியில் வாங்கி கொள்ளவும் என மருத்துவர்கள் கூறியதாகவும், லஞ்சம் கேட்பதாகவும், செவிலியர்கள் முறையாக நோயாளிகளை கவனித்து கொள்வதில்லை எனவும் ராஜேஷ்குமாரின் குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து கோவை அரசு மருத்துவமனை டீன் நிர்மலா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

ராஜேஷ்குமார் கிட்னியின் செயல்திறன் மோசமாக தான் இருந்ததாகவும், திசுக்கள் ஏற்கனவே பாதிக்கப்பட்டு இருந்தது. மேலும் நீண்ட நாட்களாகவே அவருக்கு பாதிப்பு இருந்ததால் நீண்ட கால டயாலிசிஸ் தேவைப்படும் நிலை இருந்தது. ஏற்கனவே 8 முறை டயாலிசிஸ் செய்யப்பட்டுள்ளது. கோவை அரசு மருத்துவமனைக்கு கடந்த ஐந்தாம் தேதி தான் முதலில் சிகிச்சைக்கு அவர் சிகிச்சைக்கு வந்தார். 

அவருக்கு ஜெனடிக் பரிசோதனை செய்தபோது ஜீன்கள் மோசமாக இருந்தது. மேலும் இந்த பரிசோதனை செய்ய அதிக செலவு ஆகும் என்பதால் முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சை அளித்தோம்.  அவருக்கு சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இல்லாமல் இருந்தது.

இங்கு அவருக்கு அதிக அக்கறையுடன் தான் சிகிச்சை அளித்தோம். அவர் வியாதிகளால் தான் இறந்ததுள்ளார். அவர் சிகிச்சை முறையில் எந்த தவறும் இல்லை. மேலும் இறந்தவரின் குடும்பத்திற்கு வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.

கோவை அரசு மருத்துவமனையில் மருந்துகளை வெளியில் வாங்க கூறுவது இல்லை. லஞ்சம் யார் கேட்டது என கூறினால் நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் ஸ்கேன் செய்வதற்கு 500 ரூபாய் கட்டணம் என்பது நடைமுறையில் இருப்பது தான். மருந்து தட்டுப்பாடு ஏதேனும் இருந்தால் துறை தலைவர்கள் தரப்பில் உரிய தகவல் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மேலும் ராஜேஷ்க்கு குணப்படுத்தும் வகையிலான நோய் இல்லை. அவர் 50 வயதிற்கு மேல் வரும் நோய் 35 வயதிலேயே அவருக்கு வந்து விட்டது. மேலும் கோவை அரசு மருத்துவமனைக்கு அவசர கதியில் சிகிச்சைக்கு வருபவருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கக்கப்படுகிறது அதுமட்டுமின்றி ஒவ்வொரு திங்கட்கிழமைகளிலும் மருத்துவமனை பணியாளர்களுக்கு பொதுவான ஆலோசனைக் கூட்டம் மேற்கொள்ளப்படுகிறது.

கோவை அரசு மருத்துவமனையில் ஏதேனும் லஞ்ச முறைகேடுகள் நடைபெற்றால் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளிக்க ஏதுவாக தொலைபேசி எண்களுடன் கூடிய சுவரொட்டிகள் தற்போது ஒட்டப்பட்டுள்ளது. இனி மருத்துவமனை நிர்வாகத்திடமும் நேரடியாக புகார் அளிக்கும் வகையில், தொலைபேசி எண்களுடன் கூடிய சுவரொட்டிகள் ஒட்டப்படும்.

எந்த குற்றாச்சாட்டாக இருந்தாலும் அது  நிர்வாகத்தின் கவனத்தில் கொண்டுவரப்படும் போது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது தீர்வு காணப்படுகிறது,  மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களின் செயல்பாடுகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு தரமான மருத்துவ சிகிச்சை வழங்க தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு டீன் நிர்மலா தெரிவித்தார்.

இந்த செய்தியாளர் சந்திப்பின் போது மருத்துவமனையின் இருப்பிட மருத்துவ அலுவலர் சரவண பிரியா  மற்றும் மருத்துவர்கள் உடனிருந்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe