விவசாயிகளுக்கு பஸ்பாஸ், ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தல்

published 1 year ago

விவசாயிகளுக்கு பஸ்பாஸ்,  ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தல்

கோவை: கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கிராந்தி குமார் பாடி தலைமையில் இன்று விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் நடந்தது.

இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாவட்ட தலைவர் சு. பழனிசாமி பேசியதாவது:

கோவை மாவட்டத்தில், மாவட்டத்தில்  பொள்ளாச்சி, ஆனைமலை, கோட்டூர், தொண்டாமுத்தூர், போளுவாம்பட்டி, புலுவப்பட்டி, மேட்டுப்பாளையம், சூலூார், காரமடை போன்ற பகுதிகளிலிருந்து விவசாயிகள் கோவையில் உள்ள உழவர் சந்தைக்கு காய்கறிகள் உற்பத்தியை பேருந்தில் கொண்டு வருகிறார்கள். தினசரி காலையில் வந்து மதியம் வரை மார்க்கெட் வருகிறார்கள்.

விவசாயிகள், விவசாய குடும்பத்தினர், கிராமங்களிலிருந்து நகரத்திற்கு
வரும்பொழுதும், நகரத்திலிருந்து கிராமங்களுக்கு செல்லும்போதும் விவசாய பணிகள், விவசாய கூட்டங்களில் பங்கேற்கும் வரும் போதும் பேருந்து கட்டணங்கள் அவர்களுக்கு சுமையாக உள்ளது. எனவே அவர்களுக்கு தமிழக அரசு விவசாயிகளுக்கு இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும்.

மேலும் 60வயதை கடந்த விவசாயிகளுக்கு
மாதாந்திர ஓய்வு ஊதியமாக ரூ-5000/-ம் வழங்க வேண்டும். இந்தியாவிலேயே முதல் முதலில் தமிழகத்தில் தமிழக அரசு அமல்படுத்தி முன்னுதாரணமாக திகழ வேண்டும்.

கோவையில் உள்ள நீர் நிலைகளில் இரவு நேரங்களில் கட்டடக் கழிவுகள், குப்பைகள், இறைச்சி கழிவுகள் போன்றவைகள் கொட்டப்படுவதை தடுக்க வேண்டும்.

தொண்டாமுத்தூர் ஒன்றியம் நரசிபுரம், பச்சா வயல் தடுப்பணை உடைப்பை சரி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe