கோவை உக்கடத்தின் சிறப்பான தோற்றம்!

published 1 year ago

கோவை உக்கடத்தின் சிறப்பான  தோற்றம்!

கோவை : கோவை மாவட்டத்தில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல்வேறு திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது.அதில் முக்கியமாக கோவையில் இருக்கும் குளங்கள் மற்றும் ஏரிகளை புதிய தோற்றத்தில் மாற்றப்பட்டு வருகின்றன.  கோவை குறிச்சி குளத்தில் சிறப்பான முறையில்  திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டு வருகிறது .

கோவையில் உள்ள  உக்கடம் பெரியகுளம், குறிச்சி குளம் உள்பட 9 குளங்கள் மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளது . ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ்  குளங்களை மேம்படுத்துவது போன்ற பல்வேறு பணிகள்  பலகோடி ரூபாய் செலவில் நடைபெற்றுவருகிறது.

கோவையில் உக்கடம் என்ற இடம் கோவை -பொள்ளாச்சி செல்லும் வழியில் உள்ளது . இங்குள்ள குறிஞ்சி குளம் சுமார் 330 ஏக்கள் பரப்பளவு கொண்டது .இந்த குளம் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் 50 கோடி செயலில் சீரமைக்க பட்டு வருகிறது. 

இங்குமக்களை கவரும் வகையில் 4 சிலைகள் 15அடி வரை  உயரம்கொண்ட சிலைகள் அமைக்கப்பட்டு வருகிறது .காளைகளை அடக்கும் வீரர்கள்,தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை, சிலம்பம் ஆடும்வீரர்கள் , பரத நாட்டியம் ஆடும்பெண் போன்ற எழில்மிகு காட்சிகொண்ட சிலைகள் அமைக்கப்படும் பணி நடைபெறுகிறது .

மேலும் இதனை அழகுப்படுத்து வகையில்  திருவள்ளுவர்சிலை மற்றும்  திறந்தவெளியில் செல்பி பாய்ன்ட் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலைகள் மழைக்கு துருபிடிக்காதவண்ணம் ஸ்டீலால் அமைக்கப்பட்டுள்ளது. 25 அடி உயரம் உள்ள இந்த திருவள்ளுவர்சிலையினை மேலும் சிறப்புப்படுத்தும் வகையில் 247 தமிழ் எழுத்துக்களால்  வடிவமைக்கப்பட்டுள்ளது .

திருவள்ளுவருக்கு சிலைகள் பல ஊர்களில் உள்ளதுபோல் இல்லாமல்,தமிழ் எழுத்துக்களை வைத்துசிலை அமைக்கப்பபட்டது  இதுவே முதல் முறை ஆகும்.ஒவ்வொரு சிலைகளும் தமிழ் மரபை பறைசாற்றும் வகையில் மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் 62 கோடி ரூபாய்மதிப்பீட்டில் இதேபோல் உக்கடத்தின் பெரியகுளமும் மேம்படுத்தபடும் பணி நடந்து வருகிறது. இங்கு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் ஐ லவ் கோவை எனும் செல்பி பாய்ன்ட்டும் உள்ளது.

கோவையில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அனைத்தும் முயற்சிகளும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் , பல்வேறு பணிகள் பல இடங்களில் நடைபெற்று வருகிறது .திருவள்ளுவர் சிலை கோவைக்கு மற்றொரு அடையாளமாக மாறும் என்பதில் சந்தேகமில்லை .உக்கடம் குறிச்சி குளம் அனைத்தும் பணிகளும் முடிவடைந்து விரைவில் திறக்கப்படும் .

 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe