சிக்னலில் சிக்கினால் சிக்கல் ! விடிவைத் தேடி சுந்தராபுரம் சிக்னல்

published 1 year ago

சிக்னலில் சிக்கினால் சிக்கல் ! விடிவைத் தேடி சுந்தராபுரம் சிக்னல்

கோவை : கோவை சுந்தராபுரம் சிக்னலில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இதன்காரணமாக நெரிசல் ஏற்படுவது வழக்கமான ஒன்றாக உள்ளது. இதைத் தவிர்க்க நெடுஞ்சாலைத்துறையினர் மற்றும் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

கோவையின் தென் பகுதியில் அமைந்துள்ள சுந்தராபுரம், பொள்ளாச்சி சாலையின் முக்கிய சந்திப்பு ஆகும். வாகன போக்குவரத்து  இங்கு அதிகமாக இருப்பதற்கு  காரணம் கோவை  சாலை, மதுக்கரை மார்க்கெட், சாரதா மில் சாலை மற்றும் பொள்ளாச்சி சாலை ஆகிய நான்கு சாலைகளும் சந்திப்பது ஆகும்.

மதுக்கரை மார்க்கெட்டில் இருந்து வரும் வாகனங்கள், எதிர்திசையில் இருந்து வரும் வாகனங்கள் செல்லாதவாறு சாலையை அடைத்து  நிறுத்தப்படுகிறது. இதனால் சாலை நெரிசல் மிகவும் அதிகமாகிறது.

அங்குள்ள கடைக்களின் பந்தல், கடை பலகை, மின்கம்பம் போன்றவற்றால் சாலை குறுகி வாகனங்கள் செல்வதற்கு வழியற்ற  நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால் சுந்தராபுரத்தைக்  கடக்க  இரண்டு அல்லது மூன்று  சிக்னல் விழுந்த பிறகே கடந்து  செல்ல வேண்டிய நிலை உள்ளது.

நெரிசலுக்கு தீர்வு காண ஆக்கிரமிப்புகளை அகற்றியும், வாகன போக்குவரத்தை மாற்றம் செய்தும், கூடுதல் போலீசார் மூலம் வானகனங்களை ஒழுங்குபடுத்தியும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

சுந்தராபுரம் சந்திப்பில் மேம்பாலம்  கட்டுவதற்கு  மத்திய அரசு  முதல் கட்ட  ஒப்புதல் அளித்துள்ளது. இருப்பினும் மேம்பாலம் அமைக்கப்படும் வரை மற்றப் பகுதிகளில் ஏற்படும் நெரிசலைத் தவிர்க்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் போலவே சுந்தராபுரம் பகுதிக்கும் ஒரு விடிவு வர வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe