ஆரம்ப சுகாதார நிலையத்தில் வழங்கப்பட்ட காலாவதியான மாத்திரைகள்..!

published 1 year ago

ஆரம்ப சுகாதார நிலையத்தில் வழங்கப்பட்ட காலாவதியான மாத்திரைகள்..!

கோவை : கோவை மாவட்டம் மைலேரிப்பாளையத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் காலாவதியான மாத்திரைகள்  கர்ப்பிணி பெண்ணுக்கு  வழங்கப்பட்ட சம்பவம்  அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாள்தோறும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் சிகிச்சைக்காக மைலேரிப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று சிகிச்சை  பெற்று வரும்  நிலையில்  அதே பகுதியைச் சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவர் மாதாந்திர சிகிச்சைக்காக ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்துள்ளார்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாத்திரை எழுதிக் கொடுத்துள்ளனர். அதனைத் தொடர்ந்து மருந்து வழங்கும் இடத்திற்குச் சென்று மாத்திரை பெற்று வீடு திரும்பிய அவர் அதனை சரிபார்த்த போது மாத்திரைகள் காலாவதியாகியிருப்பது தெரியவந்தது.

இது குறித்து ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்த மருத்துவரிடம் கேட்டபோது தான் தற்காலிகமாக அங்கு பணியமர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 

ஏழை மக்கள் பயன்படுத்தும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் காலாவதியான மருந்துகளை விநியோகம் செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe