காணாமல் போன ரூ 30 லடசம் மதிப்புள்ள 143 செல்போன்கள்:எஸ் பி பத்ரிநாராயணன் தலைமையில் உரியவர்களிடம் ஒப்படைப்பு..!

published 1 year ago

காணாமல் போன ரூ 30 லடசம் மதிப்புள்ள 143 செல்போன்கள்:எஸ் பி பத்ரிநாராயணன் தலைமையில் உரியவர்களிடம் ஒப்படைப்பு..!

கோவை: கோவை மாவட்டத்தில் காணாமல் போன ரூ 30 லட்சம் மதிப்புள்ள 143 செல்போன்களை உரிய  நபர்களிடம்  ஒப்படைக்கும் நிகழ்வு கோவை மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் எஸ் பி பத்ரிநாராயணன் கலந்து கொண்டு மீட்கப்பட்ட செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைத்தார்.

அதன் பின்பு அவர் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது:-

கோவை மாவட்டத்தில் இதுவரை தனிப்படை மூலம் ரூ. 2 1/4 கோடி மதிப்பிலான 1265 செல்போன்கள் மீட்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளது. கஞ்சாவுக்கு எதிராகத் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் இதுவரை 298 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 401 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 611 கிலோ கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரூ. 33 லட்சம் மதிப்பில் கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

 சட்ட விரோத மது விற்பனை தொடர்பாக 4369 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 34 ஆயிரத்து 350 மது பாட்டில்கள், 7, 735 ஆயிரம் லிட்டர் கள்ளச் சாராயம் மற்றும் 40 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 26 கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 42 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 326 திருட்டு வழக்குகளில் 444 பேர் கைது செய்யப்பட்டு ரூ. 4 கோடியே 24 லட்சம் மதிப்பிலான நகை மற்றும் பொருட்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. 

குழந்தைகளுக்கு எதிரான 116 பாலியல் குற்றங்களில் 116 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த ஆண்டில் இதுவரை 128 பாலியல் வழக்குகளில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. போக்சோ வழக்கில் எட்டு பேருக்கு சிறைத் தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது. மிஷன் கல்லூரி திட்டத்தின் கீழ் போதையில்லா கோவை என்ற திட்டம் துவங்கப்பட்டுள்ளது. அதன் மூலம் கல்லூரி மாணவர்களுக்குப் போதைப் பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு செய்யப்பட்டு வருகிறது. இதற்காக பிரத்யேக வாட்ஸப் எண் 900 325 1100 என்ற எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த வாட்ஸ்அப் எண் கல்லூரி வளாகம் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஒட்டப்படும். போதைப் பொருள் விற்பனை குறித்து தகவல் தெரிந்தால் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த எண்ணிற்குத் தகவல் தெரிவிக்கலாம். அவர்களது பெயர் விவரங்கள் ரகசியம் காக்கப்படும்.

______

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe