பாம்புக்கடிக்கு காப்பீடு : ஏழை விவசாயிகள் பயன்பெறுவார்கள் என்று ஆராய்ச்சியாளர் கருத்து

published 2 years ago

பாம்புக்கடிக்கு காப்பீடு : ஏழை விவசாயிகள் பயன்பெறுவார்கள் என்று ஆராய்ச்சியாளர் கருத்து

கோவை: இந்தியாவில் பாம்புக்கடி குறித்து கடந்த 4 ஆண்டுகளில் சுமார் 7 கோடி  மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பாம்புக்கடி ஆராய்ச்சியாளரும், லண்டனில் உள்ள ரெடிங் பல்கலைக்கழக் பேராசிரியருமான சக்திவேல் வையாபுரி தெரிவித்துள்ளார்.

கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் பேராசிரியர் சக்திவேல் வையாபுரி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

உலக அளவில் பாம்புக்கடியால் ஆண்டுதோறும் 50 லட்சம் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இவர்களில் சுமார் 1.5 லட்சம் மக்கள் உயிரிழக்கின்றனர். மேலும், 5 லட்சம் பேர் நிரந்தர உடல் குறைபாடு அடைகின்றனர். நாங்கள் கடந்த 18 ஆண்டுகளாக பாம்புக்கடி குறித்த ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறோம். தமிழத்தில் மட்டும் பாம்புக்கடியால் ஆண்டுக்கு 10 ஆயிரம் பேர் வரை மரணிக்கின்றனர்  என்பது எங்களது ஆராய்ச்சி மூலம் தெரியவந்துள்ளது.

பெரும்பாலும் விவசாயம் சார்ந்த தொழில் செய்பவர்களும் கிராமப்புற பகுதி மக்களுமே பாம்புக்கடிக்கு உள்ளாகின்றனர். தேசிய அளவில் தாக்கங்களை ஏற்படுத்தி வரும் இந்த பிரச்சனையில் மக்களுக்கு போதுமான விழிப்புணர்வு என்பது இல்லை. இதனால் கடந்த 4 ஆண்டுகளாக நாடு முழுவதும் பொதுமக்கள் மத்தியில் விஷப்பாம்புகளின் வகைகள், பாம்புக்கடியில் இருந்து தற்காத்துக் கொள்வது மற்றும் அதற்கான உரிய முதலுதவி மற்றும் சிகிச்சை முறைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். இதுவரை சுமார் 7 கோடி மக்கள் மத்தியில் இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளோம்.

பாம்புக்கடியால் பாதிக்கப்பட்ட ஒரு நபர் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதற்கு ரூ 1 லட்சம் வரை கட்டணம் செலுத்த வேண்டி உள்ளது. பாம்புக்கடிக்கான காப்பீட்டுத் திட்டம் பல நிறுவனங்களிடம் இல்லை என்ற நிலையில் ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் என்ற நிறுவனம் இத்திட்டதை செயல்படுத்தியுள்ளதை நாங்கள் வரவேற்கிறோம். லாப நோக்கங்கமின்றி இத்தகைய உயிர் காக்கும் திட்டங்களை மக்களுக்கு கொண்டு சேர்க்கிறோம். ஆண்டுக்கு ரூ. 472 என்ற பிரீமியத்தில் இந்த காப்பீட்டு திட்டத்தை பெறலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe